• Sun. Oct 12th, 2025

தினமும் முட்டைகோஸ், காலிபிளவர் சாப்பிடுபவர்களுக்கு இந்த நோய்கள் தாக்காது..!

Byadmin

Apr 6, 2018

(தினமும் முட்டைகோஸ், காலிபிளவர் சாப்பிடுபவர்களுக்கு இந்த நோய்கள் தாக்காது..!)

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வுக்காக அவர்கள் சுமார் 70 வயதான 954 பெண்களிடம் இந்த ஆய்வை நடத்தினர். அவர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்டனர். ஆய்வில் வெளிவந்த முடிவுகளின் விவரம் வருமாறு:

வயதில் மூத்த பெண்கள் முட்டைகோஸ், காலிபிளவர் போன்றவற்றை சாப்பிட்டு வருவதால் பக்கவாதம் நோயில் இருந்து விடுபடுகிறார்கள்.

தினமும் மூன்று வேளை உணவில் காய்கறிகளை சேர்த்து சாப்பிட்டு வருவதால் ரத்த நாளங்கள் வலுவடைகின்றன. மேலும்,
கோசுக்கீரை வகைகளை சாப்பிடுவதால் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்து விடுகின்றன.

அமெரிக்காவில் உள்ள இதயத்தை பாதுகாக்கும் அமைப்பின் சார்பில் வெளிவரும் இதழில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆய்வில் ஈடுபட்ட டாக்டர் லாரன் பிளாகன் ஹார்ஸ்ட் கூறுகையில், இந்த ஆய்வின் மூலம் இதயத்துக்கு செல்லும் ரத்த நாளங்கள் வலுவடைய சத்தான காய்கறிகள் சாப்பிடுவது அவசியம் என தெரிய வந்தது. இதனால் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பும் கணிசமாக குறைகிறது என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *