• Sun. Oct 12th, 2025

அன்னாசியில் இவ்வளவு மருத்துவக் குணங்களா..? தெரிஞ்சிகிட்டு சாப்பிடுங்க..!

Byadmin

Apr 6, 2018

(அன்னாசியில் இவ்வளவு மருத்துவக் குணங்களா..? தெரிஞ்சிகிட்டு சாப்பிடுங்க..!)

புற்று நோய் அனைவரையும் அச்சுறுத்தி வரும் கொடிய நோய். நமது ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கத்தினால் புற்றுநோய்,குளிர்,காய்ச்சல்,வீக்கம் போன்ற நோய்களை தவிர்க்க முடியும்.

அன்னாசி ,மஞ்சள்,எலுமிச்சப்பழம் போன்றவற்றை பயன்படுத்தி தயாரிக்கும் பானத்தை அருந்துவதால் குளிர் காய்ச்சல் குணமடைவதுடன் புற்று நோய் போன்ற நோய்கள் வராமல் தடுக்க முடியும்.

(1) எலுமிச்சப்பழம்

தினமும் வீட்டில் பயன்படுத்தி வரும் எலுமிச்சப்பழத்தில் உள்ள சிற்றிக் அமிலம் சிறுநீரக கற்களை உடைப்பதுடன் அவை வராமல் தடுக்கின்றது.

இதில் உள்ள விட்டமின்-சி,பொட்டாசியம்,நார்ப்பொருட்கள்,விட்டமின்-பி6,உடலுக்கு சக்தியை வழங்கிபுத்துணர்ச்சியை ஏற்படுத்துகின்றது.

(2) இஞ்சி

இஞ்சியில் இயற்கையாகவே புற்றுநோயை தடுக்கும் தன்மை உள்ளது. இவை வைரஸ், பூஞ்சைமற்றும் நச்சுத் தன்மைக்கு எதிராக செயற்படுவதுடன் குளிர்,தடிமல்,ஒவ்வாமையை குணப்படுத்த வல்லது.

(3) மஞ்சள்

மஞ்சள் இயற்கையான தொற்று நீக்கி என்பது அனைவரும் அறிந்தது. இவை உடலில் ஏற்படும் கட்டிகளை இலகுவாக நீக்குகின்றது.

(4) அன்னாசி

அன்னாசியில் விட்டமின்,கனியுப்புக்கள் அதிகம் உள்ளது. இவை உடல் எடை அதிகரிக்கச் செய்வதுடன், உடலில் உள்ள நச்சுத் தன்மையை வெளியேற்றி ஆரோக்கியதை பேனுகின்றது.

(5) மிளகு,தேங்காய்

தினமும் நம் உணவில் சேர்த்துக் கொள்ளும் மிளகு மற்றும் தேங்காயில் எண்ணற்ற பல மருத்துவக் குணங்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே.

இயற்கையான மருத்துவ பானம்

தேவையான சேர்மானங்கள்

• எலுமிச்சப்பழம் -1
• இஞ்சி துண்டு-2

மஞ்சள் சிறிய துண்டு

• மிளகு தூள்-1/2 தேக்கரண்டி

செய்யும் முறை

தேங்காய் எண்ணெய் தவிர அனைத்து சேர்மனங்களையும் பிளண்டரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

இறுதியில் தேங்காய் எண்ணெய்யை சேர்த்து மருத்துவ பானத்தை தயாரிக்கவும்.

இந்த பானத்தை குளிர்,காய்ச்சல்,தடிமல் போன்றவற்றால் பாதிக்கப்படும் வேளையில் குடிப்பதனால் 15 நிமிடங்களில் சிறந்த தீர்வை பெற முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *