(200 பேருடன் பயணித்த ராணுவ விமானம் வீழ்ந்து விபத்து)
அல்ஜீரிய தலைநகர் அருகே 200 பேருடன் பயணித்த ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விமானத்தில் பயணித்தவர்களில் பெரும்பாலானோர் ராணுவ வீரர்கள் ஆவர். இந்த விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. அல்ஜிரிய தலைநகரிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ள ப்லிடா மாகாணத்தின் பௌபாரிக் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.