• Sat. Apr 4th, 2026

16 பேர் ஜனாதிபதியிடம், இராஜினாமா கடிதங்கள் கையளிப்பு

Byadmin

Apr 12, 2018

(16 பேர் ஜனாதிபதியிடம், இராஜினாமா கடிதங்கள் கையளிப்பு)

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16 பேரும் தங்களுடைய இராஜினாமாக் கடிதங்களை, ஜனாதிபதியிடம் கையளித்துவிட்ட​னரென தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அந்த 16 பேருக்கும் இடையில், இடம்பெற்ற சந்திப்பின் பின்னரே, இராஜினாமா கடிதங்களை அவர்கள் கையளித்துள்ளனரென அந்தத் தகவல் தெரிவித்தது.
இந்நிலையில், ஜனாதிபதியுடனான சந்திப்புக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, “நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 பேரும், அரசாங்கத்தில் வகித்த சகல பதவிகளிலிருந்தும் இராஜினாமாச் செய்துள்ளனர்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *