(ஐக்கிய தேசியக் கட்சியின் பதவிகள் 19ம் திகதி நியமிக்கப்படும்)
ஐக்கிய தேசிய கட்சியின் பதவி நிலைகளில் எதிர்வரும் 19திகதி மாற்றங்கள் நிகழும் என குறித்த கட்சி தெரிவித்துள்ளளது.
ஐக்கிய தேசிய கட்சியின் பதவி நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது உள்ளிட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் நிமிர்த்தம் ஐக்கிய தேசிய கட்சியின் 12 உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் பீடம் நேற்று(11) அலறி மாளிகையில் கூடிய போதே குறித்த தீர்மானம் எட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, நியமிக்கப்படும் பதவி நிலைகள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின நிகழ்வின் போது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் கூறப்படுகின்றது.