• Sun. Oct 12th, 2025

மாகாண சபைகளுக்கான ஆளுநர்கள் மறுசீரமைப்பு – 07 மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்

Byadmin

Apr 12, 2018

(மாகாண சபைகளுக்கான ஆளுநர்கள் மறுசீரமைப்பு – 07 மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்)

07 மாகாண சபைகளுக்கான புதிய ஆளுநர்கள் இன்று (12) காலை நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, ஜனாதிபதி செயலகத்தில் குறித்த 07 ஆளுநர்களும் இன்று(12)  ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

இதன்படி, மேல் மாகாணத்திற்கு ஹேமகுமார நாணயக்கார, வடமேல் மாகாணத்திற்கு கே.சீ.லோகேஸ்வரன், மத்திய மாகாணத்திற்கு ரெஜினோல்ட் குரே, சப்ரகமுவ மாகாணத்திற்கு நிலுகா ஏகநாயக்க, தென் மாகணத்திற்கு மார்ஷல் பெரேரா, வடமத்திய மாகாணத்திற்கு எம்.பி.ஜெயசிங்க, ஊவா மாகாணத்திற்கு பி.பீ.திசாநாயக்க ஆகியோர் நியமிக்கபட்டடுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *