(ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான பதவிகள் எதிர்வரும் 19 ஆம் திகதி நியமிக்கப்படும்)
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான பதவிகள் எதிர்வரும் 19 ஆம் திகதி நிரப்பப்படுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது .
இதன்படி அன்றைய தினம் இடம்பெற்ற பதவி நியமனம் பற்றிய முடிவு ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என குறித்த கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்புக்கான அரசியல் சபையில், கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் உப தலைவர் ரவி கருணாநாயக்க ஆகியோர் குறித்த சபைக்கு பதவி வழியாக நியமனம் பெற்றுள்ளதோடு; நவீன் திசாநாயக்க, அகில விராஜ் காரியவசம், மங்கள சமரவீர, ரஞ்சித் மத்தும பண்டார, ஹரின் பெர்னாண்டோ, ருவன் விஜேவர்தன, அஜித் பீ பெரேரா, இரான் விக்கிரமரட்ன, ஜே. சி. அலவத்துவல, நளீன் பண்டார, அசோக பிரியந்த ஆகியோரும் அரசியல் சபையில் அங்கம் வகிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.