(மாகாண சபைத் தேர்தல் பழைய முறையில்)
நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலை முன்னர் இருந்த முறையில் விருப்பு வாக்கு அடிப்படையில் நடத்துவதற்கு சில அரசியல் கட்சிகள் இணங்கியுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய தேர்தல் முறையின் கீழ் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலினால் பல உள்ளூராட்சி மன்றங்களை முன்னெடுத்துச் செல்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக சிறிய அரசியல் கட்சிகள் குற்றச்சாட்டுக்களை எழுப்பியிருந்தன.
சிறிய கட்சிகள் பல விருப்பு வாக்கு அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென கோரி வருகின்ற நிலைப்பாட்டையே ஐக்கிய தேசியக் கட்சியும் கொண்டுள்ளதாக குறித்த கட்சியின் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
புதிய முறையில் தேர்தல் நடத்துவதற்கு நாடாளுமன்றில் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அமுலில் இருந்த விருப்பு வாக்கு அடிப்படையில் நடத்துவதற்கான திருத்தங்களை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கான அனுமதியை பெற்றுக் கொள்ள கட்சித் தலைவர்கள் இணங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.