(பொதுநலவாய இராஜ்ஜியத் தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி உரை)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் வியாழக்கிழமை(19) பொதுநலவாய ராஜ்ஜிய தலைவர்கள் மாநாட்டில் உரையாற்றவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று(16) லண்டனில் ஆரம்பமான இந்த மாநாடு, சுபீட்சம், நீதி, நிலைபேற்றுத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் பொதுநலவாய அங்கத்துவ நாடுகளின் நோக்கங்களை நிறைவேற்றுவது குறித்து மாநாட்டில் கவனம் செலுத்தப்படும்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் ஜனாதிபதி சனிக்கிழமை வரை பிரிட்டனில் தங்கியிருப்பார். அவர் பிரிட்டன் பிரதம மந்திரி திரேசா மே அம்மையாருடன் பேச்சுவார்த்தை நடத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநாட்டில் பங்கேற்கும் இராஜ்ஜிய தலைவர்கள் சிலரையும் ஜனாதிபதி சந்திக்கவுள்ளார்.
நாளை பொதுநலவாய வர்த்தக மன்ற மாநாட்டில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார். நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைதல் என்ற தொனிப்பொருளில் மாநாடு ஏற்படாகி உள்ளது. இதில் பிரதான சொற்பொழிவு ஆற்றுமாறும் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பொதுநலவாய விளையாட்டு சம்மேளனத்தின் நிகழ்வு ஒன்றிலும் இரண்டாவது எலிசபெத் மகாராணியின் 92 ஆவது பிறந்ததின நிகழ்ச்சியிலும் ஜனாதிபதி பங்கேற்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மாநாட்டில் பங்கேற்க இலண்டன் சென்றடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கை தூதரக அதிகாரிகளினால் வரவேற்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.