• Sat. Apr 4th, 2026

எரிநட்சத்திரத்தில் வைரக்குவியல் – சூடான் பல்கலைக்கழக மாணவர்கள் கண்டுபிடிப்பு

Byadmin

Apr 20, 2018

(எரிநட்சத்திரத்தில் வைரக்குவியல் – சூடான் பல்கலைக்கழக மாணவர்கள் கண்டுபிடிப்பு)

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் ஒரு எரி நட்சத்திரம் விழுந்தது. விண்வெளியில் நாசா அமைத்துக் கொண்டிருந்த ஆராய்ச்சி மையம் இதை கண்டுபிடித்தது.
ஆர்மஹாட்டா சிட்டா என அதற்கு பெயரிடப்பட்டது. ஆனால் அந்த நட்சத்திரம் பூமியை நெருங்குவதற்கு சில கி.மீட்டர் தூரத்தில் வெடித்து சிதறியது. பூமிக்குள் நுழைந்த அந்த நட்சத்திரம் சூடானில் இருக்கும் நுபியன் பாலைவனத்தில் பாதி எரிந்த நிலையில் விழுந்தது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதை சூடானில் இருக்கும் கார்டோம் பல்கலைக்கழக மாணவர்கள் ஆராய்ச்சி செய்தனர். அப்போது ஆல்மஹாட்டா சிட்டா நட்சத்திரத்தின் உடல்பகுதி முழுவதும் சிறு சிறு வைரக்கற்கள் இருந்தன.
இந்த எரிநட்சத்திரம் வெடித்தபோது வைரம் உருவாக வாய்ப்பு இல்லை. அதற்கு முன்பே அதில் வைரம் இருந்திருக்கலாம். எனவே இந்த எரிநட்சத்திரத்தில் வைரக்குவியல் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. அவை தூய்மையான வைரக்கற்கள் என்றும் அதற்கு முன்பு இதுபோன்ற வைரத்தை பார்த்ததில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் நட்சத்திரங்கள் மோதி சூரிய குடும்பம் உருவானபோது ஆல்மஹாட்டா சிட்டா எரிநட்சத்திரமும் உருவாகி இருக்கலாம். சரியாக சொல்ல வேண்டுமானால் பூமி உருவான அதே நாளில் இந்த எரிநட்சத்திரமும் தோன்றியிருக்கலாம் என்றும் மனிதர்கள் எப்படி உருவானார்கள் என்பது கூட இந்த ஆய்வின் மூலம் கண்டறிய முடியும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *