(ஐ.தே.கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் 30க்கு முன்னர்)
ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் 30ம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யப்பட வேண்டும் என நேற்று(19) பிரதமரும் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடிய கட்சியின் அரசியல் பீடக் கலந்துரையாடலில் உறுதியாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மேற்கொள்ளப்படுகின்ற மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்த இறுதி தீர்மானம், எதிர்வரும் மே மாதம் 06ம் திகதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், எதிர்வரும் 26ம் திகதி நடைபெறவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்துக்கு முன்னதாக, கட்சியின் மறுசீரமைப்பு அரசியல் பீடம் மீண்டும் கூடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.