• Sat. Apr 4th, 2026

2018ம் கல்வியாண்டு – க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்

Byadmin

Apr 25, 2018

(2018ம் கல்வியாண்டு – க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்)

2018ம் கல்வியாண்டிற்காக, டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

மேலும், பாடசாலை விண்ணப்பதாரிகளுக்கான விண்ணப்பங்கள் அந்தந்த பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறாத பாடசாலைகள் பரீட்சைகள் திணைக்களத்தின் பாடசாலை பரீட்சை கிளைக்கு அறிவிக்க வேண்டும்.

தனியார் விண்ணப்பதாரிகளுக்கான மாதிரி விண்ணப்பப் படிவம் இன்றைய(25) பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது. பாடசாலையை விட்டு விலகி உள்ளவர்கள் மாத்திரமே தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக விண்ணப்பிக்க முடியும்.

பாடசாலை மாணவராக இருந்து கொண்டு தனிப்பட்ட முறையில் விண்ணப்பிப்பது சட்டவிரோத செயலாகும். இந்த விடயம் தெரிய வந்தால், அவர்கள் பரீட்சை தடைக்கு உள்ளாக நேரிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *