• Sun. Oct 12th, 2025

முஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை – ஸ்ரீ சண்முகா மகளிர் கல்லூரி அதிபர்

Byadmin

Apr 27, 2018

(முஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை – ஸ்ரீ சண்முகா மகளிர் கல்லூரி அதிபர்)

திரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா  அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லையின் ஆசி­ரி­யைகள் பெற்றோர் மற்றும் பழைய மாண­வர்கள் நேற்று முன்­தினம் பாட­சா­லைக்கு முன்­பாக ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர். இத­னை­ய­டுத்து இந்த விவ­காரம் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் நேற்றுக் காலை திரு­கோ­ண­மலை வலயக் கல்வி அலு­வ­ல­கத்தில் நடை­பெற்­றது.
முஸ்­லிம்கள் அச்­சு­றுத்­தி­ய­தாக நான் கூற­வில்லை
சம்­பந்­தப்­பட்ட முஸ்லிம் ஆசி­ரி­யை­களோ அல்­லது அவர்­க­ளது கண­வன்­மாரோ என்னை அச்­சு­றுத்­தி­ய­தாக நான் யாரி­டமும் கூற­வில்லை. அவ்­வா­றான சம்­பவம் நடக்­கவும் இல்லை என திரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியின் அதிபர் தெரி­வித்தார். இந்த விவ­கா­ரத்தில் எமது நிலைப்­பா­டுகள் வேறு­பட்­ட­தாக இருக்­கின்ற போதிலும் நாங்கள் முஸ்லிம் ஆசி­ரி­யை­க­ளுடன் புரிந்­து­ணர்­வு­ட­னேயே நடந்து கொள்­கிறோம். முஸ்லிம் ஆசி­ரி­யை­களும் எம்முடன் நட்புடனேயே உள்ளனர். என்னை எவரும் அச்சுறுத்தவில்லை. நான் அவ்வாறு யாரிடமும் கூறவுமில்லை. முஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தியதாக கூறுவது சோடிக்கப்பட்ட செய்தியாகும் என்றும் அதிபர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
-அப்துல் சலாம் யாசீம்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *