• Fri. Nov 28th, 2025

இந்த அரசை மிக விரைவில் வீட்டிற்கு அனுப்புவோம் – மஹிந்த சூளுரை

Byadmin

May 8, 2018

(இந்த அரசை மிக விரைவில் வீட்டிற்கு அனுப்புவோம் – மஹிந்த சூளுரை)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டம் காலி, சமனல விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது.
பெருந்திருளான மக்கள் கலந்து கொண்ட இந்த மே தின கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ உரையாற்றுகையில்,
இந்த நாட்டிற்கு முதலீட்டார்கள் இப்போது வருவதில்லை, மாறாக ஓடுகிறார்கள். அதற்கு காரணம் நாட்டில் நிலவும் ஸ்தீரமற்ற நிலையே எனவும் தற்போதுள்ள அரசாங்கத்தின் ஆட்சிக்காலம் எப்போது முடிவிற்கு வருமென்றும், அதன் பிறகு தாங்கள் நாட்டிற்கு முதலீடு செய்ய வருவதாகவும் முதலீட்டாளர்கள் தெரிவிக்கின்றார்கள் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்தும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாத்துக்கொண்டிருப்பது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் என்றும் உங்கள் அனைவரது ஒத்துழைப்புடனும் இந்த அரசை மிக விரைவில் வீட்டிற்கு அனுப்ப நடவடிக்கை எடுப்போம் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ சூளுரைத்தார்.
ஜனநாயக சோசலிச குடியரசு என்று சொல்லப்படும் இலங்கையை இப்போது ´ஐக்கிய தேசிய கட்சி பொலிஸ் இராஜ்ஜியம்´ என்று தான் சொல்ல வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *