• Tue. Oct 14th, 2025

வீட்டிலே இயற்கை வழியில் சொத்தைப் பல்லை போக்குவது எப்படி?

Byadmin

May 13, 2018

(வீட்டிலே இயற்கை வழியில் சொத்தைப் பல்லை போக்குவது எப்படி?)

வாயில் உள்ள பாக்டீரியாக்களின் பெருக்கத்தால், பற்களின் எனாமல் அரிக்கப்பட்டு ஏற்படும் நிலை தான் சொத்தைப் பல். இந்த நிலையின் போது பற்களின் உள் அடுக்கான டென்டின் பாதிக்கப்படும் மற்றும் பற்களின் நிலையும் பாதிக்கப்படும்.

நிறைய பேர் சொத்தைப் பற்களைப் போக்க பல் மருத்துவரை சந்தித்து சிகிச்சை மேற்கொள்வார்கள். ஆனால் சொத்தைப் பற்களை இயற்கை வழியிலேயே போக்க முடியும். அதற்கு ஒருசில செயல்களை மனதில் கொண்டு பின்பற்ற வேண்டும். இங்கு சொத்தைப் பற்களை இயற்கை வழியில் எப்படி போக்குவது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து, அதன்படி நடந்தால், நிச்சயம் சொத்தைப் பற்கள் விரைவில் போய்விடும்.

சொத்தைப் பற்கள் வரக் காரணங்கள்
சொத்தைப் பற்கள் உணவுகளால் தான் ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரியும். அதிலும் கனிமச்சத்துக்களின் குறைபாடு, கரையக்கூடிய கொழுப்பு வைட்டமின்களின் குறைபாடு, அளவுக்கு அதிகமான சர்க்கரை உணவுகளை உண்பது மற்றும் பைட்டிக் அமிலம் நிறைந்த உணவுகளை அதிகம் உண்பதாலும் தான் சொத்தைப் பற்கள் ஏற்படும்.

சர்க்கரை உணவுகளைத் தவிர்க்கவும்
சொத்தைப் பற்கள் இருந்தால், சர்க்கரை நிறைந்த உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் சர்க்கரை வாயில் உள்ள பாக்டீரியாக்களுக்கு ஊட்டமளித்து, எச்சிலின் ஆரோக்கியத்தைத் தடுத்து, எச்சிலை அமிலமாக்கி, பற்களை மேன்மேலும் சொத்தையாக்கும். ஆகவே சர்க்கரை உணவுகளுக்கு குட்-பை சொல்லி விட வேண்டும்.

ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்ணவும்
சொத்தைப் பற்களை எதிர்த்துப் போராட, கரையக்கூடிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். அதற்கு பச்சை இலைக் காய்கறிகள், அவகேடோ, தேங்காய் எண்ணெய், நட்ஸ் மற்றும் விதைகள் போன்றவற்றை உணவில் சேர்த்து வந்தால், பற்களுக்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *