(ஜனாதிபதி பாராளுமன்றம் விஜயம்)
எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் தற்பொழுது பாராளுமன்றத்தில் ஆரம்பமானது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல் 2.00 மணியளவில் பாராளுமன்ற கட்டத்தொகுதிக்கு வருகை தந்தார்.
இதனை தொடர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் ஜனாதிபதியை விசேட மரியாதைக்கு மத்தியில் அழைத்துச்சென்றனர். இதன்போது 21 இராணுவ மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன.