(இன்று முதல் மின்சார சபை பொறியியலாளர்கள் பணிப்புறக்கணிப்பு)
மின்சார சபையின் பொறியியலாளர்கள் இன்று(08) மாலை முதல், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பணிகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த செலவில் மின்சாரத்தைப் பெறக்கூடிய தங்களது வேலைத்திட்டத்துக்கான அனுமதி இதுவரை கிடைக்கப்பெறாத நிலையிலேயே, போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் இந்த போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாக, இலங்கை மின்சார சபை பணியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.