(அகில இலங்கை ஜம்மியதுல் உலமா மற்றும் கோத்தாபய ராஜபக்ஷ இடையே இடம்பெற்ற சந்திப்பு விபரம்)
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுக்கும் இடையேயான சந்திப்பு நேற்று முன்தினம் (14.05.2018) மாலை அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை தலைமையகத்தில் இடம்பெற்றுதாக ஊர்ஜிதமான தகவல்கள் தெரிவித்தன.
அகில இலங்கை ஜம்மியாவின் தலைவர் , செயலாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டுள்ள இந்த சந்திப்பு 2 மணிக்கு ஆரம்பமாகியுள்ள அதேவேளை 4 மணியை தாண்டியும் தொடர்ந்துள்ளது.
இதன்போது ஜம்மியாவின் நிகழ்கால வேலைதிட்டங்கள் தொடர்பில் கேட்டறிந்துள்ள கோத்தாபய ராஜபக்ஷ பொதுபல சேனாவை தான் இயக்கியதாக முஸ்லிம்களிடன் பிழையான ஒரு கருத்து விதைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நடக்கும் விடயங்களை பார்த்தால் அவர்களை யார் இயக்குகிறார்கள் என குறிப்பிட்டுள்ள அவர் காலியில் பொதுபல சேனா காரியாளயத்தை தான் திறந்து வைத்ததாக கூறும் விடயம் தொடர்பிலும் விளக்கம் அளித்துள்ளார்.
பொதுபல சேனாவில் இருந்து விலகி சென்ற கிரமல விமலஜோதி தேரர் ஒரு விகாரை திறப்பிற்காக முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட உடன் வந்து தன்னை அழைத்தாகவும் அங்கு சென்ற போது பொதுபல சேனா அமைப்பினரும் வந்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஹலால் பிரச்சினை எழுந்து அதனை தடைசெய்ய கோரப்பட்ட போது முற்றாக தடைசெய்யாமல் சந்தைக்கு வரும் 30% பொருட்களுக்கு இலச்சினை பொறிக்க தான் யோசனை கூறியதாகவும் அதனை வர்த்தக நிறுவனங்களே ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை நீங்களும் அறிவீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
-நன்றி மடவள நியூஸ்