(இன்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தம்)
இன்று(16) நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தத்தினை முன்னெடுக்கவுள்ளதாக தனியார் பேருந்து சங்கங்கள் அறிவித்துள்ளன.
அரச மற்றும் தனியார் பேருந்துகளின் பயணக் கட்டணத்தை 6.56 சதவீதத்தால் அதிகரிக்க நேற்றைய(15) அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதியளிக்கப்பட்டது.
இதில் எதிர்பார்த்த அளவு பேரூந்து கட்டணம் அதிகரிக்கப்படாமையினால் தனியார் பேருந்து சங்கங்கள் வேலை நிறுத்தத்தினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.
அமைச்சரவை அனுமதி வழங்கிய பேருந்து கட்டண உயர்வு, நியாயமானதல்ல என தனியார் பேருந்து சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன
இந்த நிலையில், 15 முதல் 20 சதவீத கட்டண அதிகரிப்பை அந்த சங்கத்தினர் கோரி, இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தினை ஆரம்பிக்க உள்ளதாக தனியார் பேருந்து சங்கங்கள் அறிவித்துள்ளன.
அனைத்து மாகாண தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் விஜித்த குமார, இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கதின் தலைவர் கெமுனு விஜேரத்ன மற்றும் அகில இலங்கை தனியார் பேருந்து சங்கங்களின் சம்மேளனத்தின் பிரதான செயலாளர் அஞ்ஜன ப்ரியஞ்சித் ஆகியோர் இதனைத் தெரிவித்துள்ளனர்.