(ஜெருசலேமில் தூதரகம் திறப்புக்கு எதிர்ப்பு – அமெரிக்காவுக்கான தூதர் நாடு திரும்ப பாலஸ்தீனம் உத்தரவு)
இஸ்ரேலின் அமெரிக்க தலைமை தூதரகத்தை பாலஸ்தீன் நாட்டின் சொந்த பூமியான கிழக்கு ஜெருசலேம் நகருக்கு மாற்ற உத்தரவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலின் புதிய தலைநகராக பாலஸ்தீன் நாட்டின் கிழக்கு ஜெருசலேம் நகரை அங்கீகரிப்பதாக சமீபத்தில் சட்ட விரோதமாக செயற்பட்டு அறிவித்தார்.
இதனால், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் தொற்றியுள்ளது. குறிப்பாக, காஸா எல்லைப்பகுதியில் இஸ்ரேல் விமானப் படைகள் காஸா பகுதியில் உள்ள பொதுமக்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையில், நேற்று முன்தினம் கிழக்கு ஜெருசலேம் நகரில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்ட நிலையில் காஸா எல்லைப்பகுதியில் சுமார் 35 ஆயிரம் பேர் குவிந்து உச்சகட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பாலஸ்தீனன் பொது மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் 59 பேர்கொல்லப்பட்டுள்ளனர். 1,200 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 110 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக காஸா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவுக்கான பாலஸ்தீன தூதரை திரும்பப்பெறுவதாக பாலஸ்தீன அதிபர் மொகமது அப்பாஸ் அறிவித்துள்ளார். இதையடுத்து அமெரிக்காவுக்கான பாலஸ்தீன தூதர் ஹுசாம் சோம்லாட் பாலஸ்தீனத்துக்கு திரும்பி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Gaza #USEmbassy #Jerusalem #Palestine