(இஸ்ரேலிய பிரதமருக்கு போரைப் பிரகடனம் செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டது)
சமீபத்தில் இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தத்தை அடுத்து இஸ்ரேலிய பிரதமருக்கு பாதுகாப்பு அமைச்சின் சம்மதத்தோடு எந்த வேளையிலும் எந்தவொரு நாட்டுக்கும் எதிராக போர்ப் பிரகடனம் செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமருக்கு அதிகாரம் வழங்கும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தத்திற்கு நெசட் ஆதரவு வழங்கியுள்ளது.
முன்னைய சட்டத்தின்படி இஸ்ரேலின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். ஆனால், தற்போது பாதுகாப்பு அமைச்சின் சம்மதத்துடன் நெடன் யாஹு போரை தனித்துப் பிரகடனம் செய்யலாம்.
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பதட்டம் அதிகரித்துள்ள நிலையிலேயே இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் இப்புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.