• Sun. Oct 12th, 2025

பலஸ்தீன “நக்பா” கொள்கை மாறாத மஹிந்தையும், மறு பரிசீலனை செய்ய வேண்டிய மக்களும்

Byadmin

May 17, 2018

(பலஸ்தீன “நக்பா” கொள்கை மாறாத மஹிந்தையும், மறு பரிசீலனை செய்ய வேண்டிய மக்களும்)

பலஸ்தீன மக்களின் அவலப் போராட்டம், நீண்ட வரலாற்றைக் கொண்டது, அது அவர்களின் போராட்டம் மட்டுமல்ல, உலக முஸ்லிம்களின் முதலாவது கிப்லாவை மீட்பதற்கானதும், சர்வதேச மட்டத்தில் ஒடுக்கப்படும்  மக்களை மீட்க எதுவித எதிர்பார்ப்புகளும் இன்றி ,ஆதரவுக்குரல் கொடுக்கும் மனிதாபிமானிகளினதும் போராட்டமாகும்,

அந்த வகையில்  பலஸ்தீன மக்களின் “இடம்பெயர்வைக்குறிக்கும்’ நக்பா’ தின விழிப்புணர்வு நிகழ்வு   அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற போது அதன் அதிதியாக்க் கலந்து கொண்ட  இலங்கையின் 5வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களை இப்போராட்டத்தை ஆதரிக்கும் அனைவரும் பாராட்டியே ஆக வேண்டும்,

உலகளாவிய அமெரிக்க ,அழிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இஸ்ரவேலினால் அன்றாடம் இடம்பெறும், மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளை கண்டித்தும், அதனை வெளி உலகிற்கு தெளிவுபடுத்தும் நோக்கிலும் இடம்பெற்ற இந்நிகழ்வை ஆரம்பிப்பதற்கான அதிதியாக மஹிந்த கலந்து கொண்டிருப்பது, அவரது இஸ்ரேலிய அடக்குமுறை எதிர்ப்பை மட்டுமல்ல, அவரது நீண்டகால பலஸ்தீன்- இலங்கை நட்புறவினை தொடர்வதில்  இன்னும் உறுதியாக இருப்பதையே காட்டுகின்றது,

, மஹிந்தவின் கடந்த கால அரசியல் தோல்விகளின் பின்னால் சிறுபான்மையினர் உள்ளனர், குறிப்பாக முஸ்லிம்களே காரணம் என்ற குற்றச்சாட்டையும்,  அண்மைக்கால கலவரங்களின் மூலம், சிங்கள பௌத்த வாக்குகளே  தான்வெற்றி பெறப் போதுமானவை என்ற கோஷங்களுக்கு மத்தியிலும் , இந்நிகழ்வில் அவர்  கலந்து கொண்டிருப்பதை, மனச்சாட்சி உள்ள அனைவரும் பாராட்டித்தான் ஆக வேண்டும்,

இன்னும் , மஹிந்த ராஜபக்‌ஷ தனது சர்வதேச கொள்கையில் இப்போதும் முஸ்லிம் நாடுகளுடனான ஒரு நல்லுறவையே விரும்புகின்றார் என்பதற்கான சமிக்‌ஷையாகவும் இது அமைகின்றது எனலாம்,

எது எப்படியோ கடந்த கால நிகழ்வுகளில் இருந்து பல பாடங்களையும் பாதிப்புக்களையும்  ராஜபக்‌ஷ பெற்றிருந்தாலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுத்து உதவுவதில் அவர் இன்றும்  உறுதியாகவே உள்ளார் என்பதை இந்நிகழ்வு  எடுத்துக்காட்டுவதோடு அவரது சிறந்த உறுதியான  கொள்கைப்பற்றையும் வெளிக்  காட்டுகின்றது எனலாம்.

, அது போலவே இலங்கை முஸ்லிம்களும் தமது எதிர்கால அரசியல் தெரிவுகளில்,  மிக நிதானமாகச் சிந்திக்க வேண்டும் என்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்கும் நிகழ்வாகவும் இதனைக்கொள்ள முடியும்,

எது எப்படியோ சிங்கள பௌத்த வாக்குகளை மட்டும், கவனத்தில் கொள்ளாது, இவ்வாறான மனிதாபிமான போராட்டங்களில்  எதுவித எதிர்பார்ப்புக்களும் இன்றி இணைந்து செயற்படும் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்கள் அரசியல் வேறுபாடுளுக்கு அப்பால் பாராட்டப்பட வேண்டியவரே ஆகும்.

MUFIZAL ABOOBUCKER.
மெய்யியல் துறை 
பேராதனைப் பல்கலைக்கழகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *