(12.5% பேரூந்து கட்டண உயர்வு தொடர்பிலான அமைச்சரவை பத்திரம் 22ம் திகதி அமைச்சரவைக்கு)
குறைந்தபட்ச பேரூந்து கட்டணத்தை 12 ரூபாவாக அதிகரிப்பது மற்றும் நூற்றுக்கு 12.5 சதவீத பேரூந்து கட்டண உயர்வுடன் தொடர்புடைய அமைச்சரவை பத்திரம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(22) கூடவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக் அபெசிங்க தெரிவித்தார்.
நேற்று(16) பேரூந்து கட்டணம் தொடர்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
இதற்கு முன்னர் அமைச்சரவை அனுமதி கிடைத்த 6.56 சத வீத பேரூந்து கட்டண திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் இன்று(17) முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட போவதாக அறிவித்திருந்த நிலையில் , பிரதி அமைச்சருடம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் குறித்த போராட்டம் கைவிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.