• Mon. Oct 13th, 2025

10 ஆண்டு விசா – துபாய் முடிவு

Byadmin

May 22, 2018

(10 ஆண்டு விசா – துபாய் முடிவு)

வெளிநாட்டு முதலீட்டாளர்கள், நிபுணர்கள் மற்றும் புத்திசாலி மாணவர்களுக்கு 10 ஆண்டு குடியேற்ற விசா வழங்க ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் அந்நாட்டில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள், பொறியியல், மருத்துவம் போன்ற துறைகளின் நிபுணர்கள் மற்றும் புத்திசாலி மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் 10 ஆண்டு குடியேற்ற விசா வழங்க முடிவு செய்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் இந்த முடிவை அறிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம், “உற்பத்தியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் முனையமாக ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கும் வகையில், எங்களின் சுற்றுச்சூழல் அமைப்பு, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சிறந்த அரசியலமைப்பு சட்டம் மூலமாக உலகலவில் உள்ள திறமையாளர்கள் அவர்களின் திட்டங்களை இங்கு செயல்படுத்த முடியும்.

இதனால், முதலீட்டாளர்களுக்கான சேரிடமாகவும், படைப்பாளிகளின் தாய்மடியாகவும் ஐக்கிய அரபு அமீரகம் இடமாக விளங்கும். எனவே புத்திசாலிகள் மற்றும் நிபுணர்கள் அவர்களின் திறன்களை அமீரகத்தில் கட்டவிழ்த்து விட இது சிறந்த வாய்ப்பாகும்” என தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *