• Sun. Oct 12th, 2025

அனர்த்தத்தினால் உயிரிழந்தோருக்கு தலா ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு

Byadmin

May 23, 2018

(அனர்த்தத்தினால் உயிரிழந்தோருக்கு தலா ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு)

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தேவையான நிதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, உயிரிழந்த ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்படும்.
இறுதிக் கிரியைகளுக்காக 15,000 ரூபா நிதி பிரதேச செயலாளர் , கிராமசேவகர் ஊடாக உடனடியாக வழங்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் சமிந்த பத்திரண தெரிவித்துள்ளார்.

எஞ்சிய தொகை 85,000 ரூபா சம்பந்தப்பட்டவரின் மரணச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். இரண்டு கட்டங்களில் குறித்த இந்தத் தொகை வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அனர்த்தம் ஏற்பட்ட மாவட்டங்களுக்கு தனித்தனியாக நிதி வழங்கப்பட்டுள்ளது. அனத்தத்தின் காரணமாக இதுவரையில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *