• Sat. Oct 11th, 2025

இவரும் பஸ்ஸில்தான் பயணிக்கிறாராம் 

Byadmin

Jun 14, 2017

ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக ஆகிவிட்டால் அன்றிலிருந்து அவரது ஆடம்பர வாழ்க்கை ஆரம்பமாகிவிடும்.

மக்கள் சேவை என்பதை விடவும் தான் பணம் சம்பாதிக்க வேண்டும்;தான் ஆடம்பரமாக வாழ வேண்டும்;தேர்தலில் தான் செலவழித்த பணத்தை மீளப் பெற வேண்டும் என்ற நோக்கில்தான் அதிகமானவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு முயற்சி செய்கின்றனர்.

ஓடுவதற்கு மோட்டார் பைக் கூட இல்லாமல் இருக்கும் ஒருவர் நாடளுமன்றம் வந்ததும் 5 கோடி ரூபா பெறுமதியான வாகனத்துக்குச் சொந்தக்காரராகின்றார்.கொழும்பிலும் அவரது சொந்த ஊரிலும் பல கோடி ரூபா மதிப்புள்ள மாளிகைகள் கட்டப்படுகின்றன.

ஆனால்,இவ்வாறான வாழ்க்கையில் இருந்து வேறுபட்டவர்கள்தான் ஜேவிபியினர்.அவர்கள் பயணம் செய்வது சாதாரண வாகனங்களில்தான்.

நடைபாதை கடைகளில் பொருட்கள் கொள்வனவு செய்வர்.அவர்களுள் அதிகமானவர்கள் சாதாரண மக்களுடன் சேர்ந்து பஸ்களில்தான் பயணம் செய்வர்.

ஆனால்,ஏனைய கட்சிகளில் உள்ளவர்கள் அவ்வாறு பஸ்களில் செல்வது அபூர்வம்.அந்த வகையில்,மஹிந்த அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ரமேஷ் பத்திரன [ காலஞ்சென்ற முன்னாள் கல்வி அமைச்சர் ரிச்சட் பத்திரனவின் புதல்வர்] அதிகமாக பஸ்களில்தான் பயணம் செய்வாராம்.

ஓர் ஊடகவியலாளர் ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரனவுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது இந்த விடயம் பற்றியும் கூறி இருக்கின்றார்.

அப்போது தானும் பஸ்களிலும் ரயில்களிலும் பயணிப்பதாகக் கூறினாராம்.அது மாத்திரமன்றி,தான் ரயில்களில் பயணித்த டிக்கட்களையும் அந்த ஊடகவியலாளரிடம் காட்டினாராம்.

-எம்.ஐ.முபாறக்-சிரேஷ்ட ஊடகவியலாளர் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *