• Sun. Oct 12th, 2025

இறுதிப்போட்டிக்கு நுழைவது யார்? ஐதராபாத்-கொல்கத்தா இன்று பலப்பரீட்சை

Byadmin

May 25, 2018

(இறுதிப்போட்டிக்கு நுழைவது யார்? ஐதராபாத்-கொல்கத்தா இன்று பலப்பரீட்சை)

11-வது ஐ.பி.எல். போட்டி தற்போது நிறைவடையும் தருவாயில் இருக்கிறது. இன்னும் 2 ஆட்டமே எஞ்சி இருக்கிறது.

டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விட்டது. இறுதிப் போட்டிக்குள் நுழையும் 2-வது அணி எது என்பது இன்று தெரியும்.

கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடை பெறும். ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத்- தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்குள் நுழையும். தோற்கும் அணி வெளியேற்றப்படும். இரு அணிகளும் சமபலத்துடன் திகழ்வதால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் அணி எது? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

ஐதராபாத் அணி 2-வது முறையாகவும், கொல்கத்தா அணி 3-வது முறையாகவும் இறுதிப் போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளன.

குறைந்த ஸ்கோர் எடுத்தாலும் அதை வைத்து தனது சிறப்பான பந்துவீச்சு மூலம் சவால் தொடுக்கும் திறமையான அணி ஐதராபாத் ஆகும். உள்ளூர் மைதானத்தில் விளையாடுவது கொல்கத்தாவுக்கு கூடுதல் பலமே.

இந்தப் போட்டித் தொடரில் அதிக ரன் எடுத்த வீரராக வில்லியம்சன் உள்ளார். அவர் 8 அரை சதம் உள்பட 685 ரன்கள் குவித்துள்ளார். கொல்கத்தா அணிக்கு அவர் மிகப்பெரிய சவாலாக விளங்குவார்.

இது தவிர தவான் (437 ரன்), மனீஷ் பாண்டே (284 ரன்), யூசுப் பதான் (212 ரன்), சகீப்-அல்- ஹசன் (183 ரன், 13 விக்கெட்), ரஷீத்கான் (18 விக்கெட்), சித்தார்த் கபூல் (19 விக்கெட்), புவனேஸ்வர் குமார் (9 விக்கெட்) போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

கொல்கத்தா அணியில் அதிக ரன் எடுத்த வீரர் கேப்டன் தினேஷ் கார்த்திக். அவர் 2 அரை சதம் உள்பட 490 ரன் எடுத்துள்ளார். இது தவிர கிறிஸ்லன் (443 ரன்), ராபின் உத்தப்பா (349 ரன்), சுனில்நரீன் (331 ரன், 16 விக்கெட்), ஆந்தரே ரஸ்சல் (313 ரன், 13 விக்கெட்), குல்தீப் யாதவ் (15 விக்கெட்), பியூஸ் சாவ்லா (13 விக்கெட்) போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

இந்த தொடரில் இரு அணிகளும் மோதிய 2 போட்டியில் தலா 1 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளும் இதுவரை ஐ.பி.எல்.லில் 14 போட்டியில் மோதியுள்ளன. இதில் கொல்கத்தா-9, ஐதராபாத்-5ல் வெற்றி பெற்றுள்ளன. இரு அணியிலும் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் 11 வீரர்கள் வருமாறு:-

ஐதராபாத்: வில்லியம்சன் (கேப்டன்), தவான், கோஸ்சுவாமி, மனீஷ் பாண்டே, சகீப்-அல்-ஹசன், யூசுப்பதான், பிராத் வெயிட், ரஷீத்கான், புவனேஷ் வர்குமார், சித்தார்த்கவூல், சந்தீப் சர்மா.

கொல்கத்தா: தினேஷ் கார்த்திக் (கேப்டன்), கிறிஸ் லின், சுனில் நரீன், உத்தப்பா, நிதிஷ்ரானா, ஆந்தரே ரஸ்சல், சுப்மன் ஹில், சீயர்லெஸ், குல்தீப் யாதவ், பியூஸ் சாவ்லா, கிருஷ்ணா.#IPL2018 #KKRvSRH #KKR #SRH

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *