(திலங்கவுக்கு எதிராக நிஷாந்த மேன்முறையீட்டு நீதிமன்றில்)
எதிர்வரும் 31ம் திகதி நடைபெறவுள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தலில், இந்நாள் தலைவர் திலங்க சுமதிபாலவின் பெயர் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை சட்டத்திற்கு முரணானது என தெரிவித்து அதற்கு தடை உத்தரவு ஒன்றினை பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த நிறுவனத்தின் முன்னாள் செயலாளரும் இந்நாள் தேர்தலில் தலைமைப் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளருமான நிஷாந்த ரணதுங்கவினாலேயே குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.