முன்னைநாள் தமிழரசுக் கட்ச்சி பிரமுகரும், தீவிர காந்தியவாதியும் ஐநா அலுவலரும் பின்னர் காந்தளகம்
பதிப்பகத்தை நிறுவி பணியாற்ற்யவருமான மறவன்புலவு சச்சிதானந்தம், இளமையில் தான் மூன்னெடுத்த தமிழ் பேசும் மக்களின் சமாதான சகவாழ்வு கொள்கைகளுக்கு எதிராக மாட்டிறைச்சியைத் தடைசெய் என்கிற போர்வையில் தீவிரமான மதவெறியை தூண்டும் செயல்களில் இறங்கியிருப்பது அதிற்ச்சி தருகிறது.
பதிப்பகத்தை நிறுவி பணியாற்ற்யவருமான மறவன்புலவு சச்சிதானந்தம், இளமையில் தான் மூன்னெடுத்த தமிழ் பேசும் மக்களின் சமாதான சகவாழ்வு கொள்கைகளுக்கு எதிராக மாட்டிறைச்சியைத் தடைசெய் என்கிற போர்வையில் தீவிரமான மதவெறியை தூண்டும் செயல்களில் இறங்கியிருப்பது அதிற்ச்சி தருகிறது.
சச்சி அண்ணா என தமிழர்களாலும், முஸ்லிம்களாலும் அன்பாக அழைக்கபட்ட ஒருவர், கிறிஸ்துவரான தந்தை செல்வாவின் தலைமையைல் தீரமாகவும் சிறப்பாகவும் செயல்பட்ட ஒருவர் இவ்வளவுதூரம் கீழிறங்கிப்போய் இந்து மத அடிப்படைவாதியாகச் சீரழியமுடியுமென என்னால் நம்ப முடியவில்லை. இது ஒரு ஆபத்தின் அறிகுறியோவென கலங்குகிறேன். இத்தகைய தமிழர் விரோத முஸ்லிம்விரோத நடவடிக்கைகளை வடகிழக்கு மண்ணில் ஒருபோதும் அங்கீகரிக்கவோ அனுமதிக்கவோ முடியாது.
சாவகச்சேரியில் தமிழரின் நெறியான மத நல்லிணக்கத்துக்கு எதிரான முயற்சிகளில் ஒருசிலர் ஈடுபடுகிற செய்தி அதிற்ச்சி தருகிறது.
இத்தகைய முயற்ச்சிகள் தமிழர் மத்தியில் ஒருபோதும் வெற்றிபெறாது. இது ஈழ தமிழர்கள் மட்டுமல்ல தமிழகம் உட்பட உலக தமிழர்களது ஆயிரம் வருடப்பழமையான மதச் சார்பின்மைக்கும் சகவாழ்வு நெறிகளுக்கும் எதிரான ஒரு தாக்குதலாகும்.
முன்னர் தந்தை செல்வா தலைமையில் நல்லுதாரணமான பணிகளோடு வாழ்ந்த சச்சி அண்ணா இத்தகைய மட்டத்துக்கு இறங்கிப்போனதும் தமிழர் நெறிகளுக்கும் மத நல்லிணக்கத்துக்கும் விரோதமான செயல்களில் முன்னிற்பதும் அதிற்ச்சி தருகிறது. சச்சி அண்ணா தனது இளமையில் கிறிஸ்தவரான தந்தை செல்வா தலைமையை ஏற்றிருந்தகாலத்தில் மனித உரிமைகள் சாதி சமத்துவம் தமிழர் முஸ்லிம்கள் ஐக்கியம் தமிழர் உரிமைகள் என தான் எழுப்பிய உன்னதமான கோசங்களை வாழ்ந்த வாழ்வின் மேன்மையை தானே சிதைக்கிற கொடுமையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
புதிதாக வரித்துக்கொண்ட முஸ்லிம் விரோததை அதன் தொடற்சியான இத்தகைய மனுக்குலத்துக்கு விரோதமான நடவடிக்கைகளை சச்சி அண்ணா உடனே கைவிடவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். தமிழர் நலனுக்கு விரோதமான தவறான காரியங்களை சாவகச்சேரியிலோ வடமாகாணத்திலோ யாழ்ப்பாணத்திலோ யாரும் ஆதரிக்கக்க மாட்டார்கள் என்பதை நாம் மீண்டும் மீண்டும் தொடற்ச்சியாக உறுதிப்படுத்த வேண்டும்.
யாழ்பாண சிவில் சமூகத் தலைவர்களும் யாழ் பல்கலைக் கழக சமூகமும் வடமாகாணசபையும் தமிழர் அரசியல் தலைமைகளும் ஏன் இன்னமும் மவுனமாக இருக்கிறார்கள்? அவர்கள் உடனடியாக செயல்பட்டு வடகிழக்கு மாகான ஒற்றுமைக்கும் சுபீட்சத்துக்கும் எதிரான இத்தகைய ஆபத்தான போக்குகளை தடுத்து நிறுத்த வேண்டும். வடமாகாணத்தில் எதிரும் புதிருமான இரு தரப்புகள் மதரீதியாக இரு தரப்புக்கள் எதிர்தர்ப்பு இல்லாத நிலையில் ஓரிரு பிரமுகர் மட்ட அமைப்புகளாக இயங்கும் மதவாத சக்திகள் குழுக்களாக வளர்ச்சியடையவோ வெற்றுபெறுவதற்கோ புறச்சூழல் இல்லை என்பது நம்பிக்கை தருகிறது.
இதேபோல கிழக்கு மாகாணத்தில் தமிழர் முஸ்லிம்கள் மத்தியில் தலைகாட்டும் மதஅடிப்படை இனவாத சிறுகுழுக்களையும் பிரமுகர்களையும் கிழக்கு மாகாண தமிழ் முஸ்லிம் மக்கள் நிராகரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. வடபகுதியில் குட்டித் தாச்சியான பசு கொல்லப்பட்டு கன்று குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட சேதி உண்மையானால் அதனையும் நான் கண்டிக்கிறேன்.
1990 களின் பின்னர் மாட்டிறைச்சி உண்பதிலும் விற்பதிலும் முஸ்லிம்கள் முதன்மை இப்ப இல்லை. வட மாநிலத்தைபொறுத்து இன்று மட்டிறைச்சி உண்பவர்களுள் முஸ்லிம் அல்லாதவர்கள்தான் பெரும்பாண்மையாக உள்ளனர். மாட்டிறைச்சி வியாபாரத்திலும் முஸ்லிம் அல்லாதவர்கள் குரிப்பிடத்தக்க அளவில் ஈடுபட்டுவருகின்றனர். மாட்டிறைச்சி வியாபாரிகள் மாட்டுக்களவை ஊக்குவிப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
இறைச்சிக்காக கருவுற்ற பசுக்கள் கொல்வதாகவும் குற்றச் சாட்டுள்ளது. 1990 களின்பின்னர் இத்தகைய குற்றச்சாட்டுக்களை முஸ்லிம் வியாபாரிகள்மீதுமட்டும் வைக்கமுடியாது.
இத்தகைய குற்ரச்சாட்டுக்களுக்கு எல்லா சமயசமூகங்களையும் சேர்ந்த வியாபாரிகளுக்கும் பதில் சொல்ல வேண்டும். இத்தகைய குற்றச் செயல்களுக்கு எதிராக போதிய சட்டங்கள் உள்ளன. அவை அமூலாக்கப்பட்டாலே போதுமானது. இதை யாரும் ஒரு சமூகத்துக்கு எதிரான பழியாக மாற்ரமுடியாது.
போர்க்காலங்களிதான் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் வடபகுதியில் பரவியது. அதன் முன்னர் பெரும்பாண்மையான இந்துக்கள் (சைவ சயத்தவர்) மத்தில்யில் மாட்டிறைச்சி உண்ணுகிறவர்களின் தொகை குறைவாகவே இருந்தது, எனினும் உணவகங்களில் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் இளைஞர்கள் மத்தியில் பரவிவந்தது. எனினும் போர்காலத்தில் மாட்டிறைச்சி முக்கிய உணவுகளில் ஒன்றாக மாறியது. போர்க்காலத்தில் பெருமழவு மீன்பிடித் தடை விதிக்கபட்டிருந்ததால் மீன் தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும் சிங்களப்பகுதிக்கு மாடு ஏற்றுமதி வர்த்தகமும் தடைப்பட்டதால் மாடுகளின் பெருக்கமும் ஏற்பட்டது. ஆரம்பத்தில் இருந்தே இயக்க போராளிகளின் முக்கிய கறி உணவாக மாட்டிறைச்சியே இருந்தது. இந்தபின்னணியில்தான் போராலிகளின் அனுசரனையோடு அக்காலத்தில் நகர்களில் மாட்டிறைச்சி கடைகளும் கிராமங்களில் மாடு வெட்டிப் பங்கிடும் இடங்களும் பரவியதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.
ஆரம்பத்தில் இருந்தே விடுதலைப்புலிகள் இயக்கப் போராளிகளதும் ஏனைய இயக்க போராளிகளதும் முக்கிய கறி உணவாக மாட்டிறைச்சி இடம் பெற்றது. வடமாகாணத்தில் மாட்டிறைச்சியை பிரபலமாக்கியதே விடுதலை இயக்கங்கள்தான் என உறுதியாகக் கூற முடியும். எனவே தமிழரையோ அல்லது தமிழர் விடுதலை வரலாற்ரையோ மதிக்கும் எந்த தமிழனும் புதிதாக சிலர் முன்னிலைப்படுத்த விரும்பும் மாட்டிறைச்சி எதிர்ப்பு இயக்கத்தை ஆதரிக்க மாட்டான். விடுதலை இயக்கங்கள் இருந்திருப்பின் இத்தகைய பேச்சுக்கே இடமிருந்திருக்காது.
விடுதலைப்புலிகளின் நிர்வாகப் பிரதேசங்களில் நகர்மயமான இடங்களில் மாட்டிறைச்சி கடைகள் மிகவும் சுத்தமான சுகாதாரசூழலில் நடத்தப்பட்டன. நகர் மயமற்ர பகுதிகளில் ஊர்ப்புறத்தில் மாடு அடித்துப் பங்கிட அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. . மேலும் விடுதலைப் புலிகளின் உணவகளில் மாட்டிறைச்சி முக்கியமான உனவாக இருந்தது.
மாட்டிறைச்சி எழுற்ச்சி பெற்ற ஈழத் தமிழர்களின் உணவாகும். அதனை தடை செய்யென்று கேட்ப்பதற்க்கு யாருக்கும் அனுமதி இல்லை.