(எதிர்வரும் ராஜபக்ஷ ஆட்சியின் கீழ் முஸ்லிம் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான ஒரு சூழல் ஏற்படுத்தப்படும்)
எதிர்வரும் ராஜபக்ஷ ஆட்சியின் கீழ் அனைத்து மக்களும் அச்சமின்றி வாழ்வதற்கான சூழல் உருவாக்கப்படும் என முன்னாள் பாகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பேருவளையில் நேற்று இடம்பெற்ற (இப்தார்) நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.
எதிர்வரும் காலத்தில் முஸ்லிம் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான ஒரு சூழல் ஏற்படுத்தப்படும் என்பதை உறுதியாக கூற முடியும் எனவும்,
தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் இணைந்து வாழ்வதற்கான சூழல் தோற்றுவிக்கப்படும் எனவும் கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.