(ஹெம்மாதகமை மதிலிய ரஜமஹா விஹாரையில் நடை பெற்ற இப்தார் நிகழ்வு)
ஹெம்மாதகமை மதிலிய ரஜமஹா விஹாரையில் நடை பெற்ற இப்தார் நிகழ்வு. நல்லிணக்கத்திற்கு ஓர் முன்மாதிரி நிகழ்வாக அமைந்தது.
மதிலிய ரஜமஹா விஹாரையின் தலைமை பிக்கு இழுக்கொட ஞானானந்த தேரோ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் ஹெம்மாதகமை மாவனல்லை பிரதேச பிரமுகர்கள், அறனாயக பிரதேச செயளாலர் இஸட்.ஏ.எம் பைஸல் அவர்கள் கேகாலை பொலிஸ் அத்தியட்சகர் (ASP) மற்றும் பலர் இவ்விப்தார் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
அங்கு உரை நிகழ்த்திய தலைமை பிக்கு அவர்கள் இஸ்லாம் பற்றியும் முஹம்மத்(ஸல்) மற்றும் ரமழானின் சிறப்பு பற்றியும் உரையாற்றியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
அவரது இஸ்லாம் பற்றிய புரிதல், ஆச்சரியமாக இருந்தது.
அவரை தொடர்ந்து பொலிஸ் அத்தயட்சகரும், பிரதேச செயளாலர் பைஸல் அவர்களின் உரைகளும் நல்லிணக்கத்திற்கு வலுச்சேர்ப்பதாக அமைந்தது.
பின்னர் ரஜமஹா விஹாரையில் அஷ்செய்க் தாஸிம் மௌலவி (உப செயளாலர் அஇஜஉ) அவர்களின் அதானை தொடர்ந்து நோன்பு திறக்கப்பட்டதோடு மஹ்ரிப் தொழுகையும் அஷ்செய்க் தாஸிம் மௌலவி அவர்களால் நிகழ்த்தப்பட்டது.
நான் நினைக்கிறேன் அண்மைகால வரலாற்றில் விஹாரையொன்றில் 100% சிங்கள பௌத்தர்கள் வாழும் பிரதேசமொன்றில் ஒலிவாங்கியில் அதான் கூறி தொழுகை நடத்தப்பட்டது முதல் தடவையாக இருக்குமென்று.
அஷ்ஷெய்க் தாஸிம் மௌலவியவர்களின் நல்லிணக்க செயல்பாடுகளின் மைல் கல்லாக இந்நிகழ்வை கருதலாம். தேசிய மட்டத்திலும் எமது பிரதேச மட்டத்திலும் நல்லிணக்கத்திற்காக பாடுபடும் தாஸிம் மௌலவி அவர்களின் செயல்பாடுகள் மெச்சத்தக்கது.
மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றது.
– நியாஸ் சாலி –