(“இந்த அரசாங்கம் எதையும் செய்யவில்லை” – சமல் ராஜபக்ச)
ராஜபக்ஷர்கள், மீண்டும் அதிகாரத்துக்கு வரவேண்டும் என்பதே, நாட்டு மக்களின் எதிர்ப்பார்ப்பு என, நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கேகாலையில் விகாரை ஒன்றில் நேற்று (30) இடம்பெற்ற மத நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் இதுவரை இந்த நாட்டுக்கோ அல்லது மக்களுக்கோ எதையும் செய்யவில்லை எனவும், பதவிக்கு வந்த காலத்தில் இருந்து ராஜபக்ஷக்கள் மீது குற்றம்சாட்டுகளை சுமத்திக்கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2020ஆம் ஆண்டுத் தேர்தலில் யார் களமிறக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை எனவும், எனினும் அந்த சந்தர்ப்பத்தில் அதுத் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்க முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.