• Sun. Oct 12th, 2025

(தொடர் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் மின்சார பொறியியலாளர்கள்)

Byadmin

May 31, 2018

(தொடர் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் மின்சார பொறியியலாளர்கள்)

தொடர் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றினை முன்னெடுப்பது குறித்து இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கத்தின் நிறைவேற்று சபை நாளை(01) காலை 9.30 மணியளவில் கூடவுள்ளது.

மின்சார பொறியியலாளர்களது கோரிக்கைகளுக்கு தீர்வு வேண்டி நடைபெறும் சட்டப்படி வேலை செய்யும் போராட்டமானது ஒரு மாத காலமாக நடைபெற்று வருகின்ற நிலையில், அதற்கு எவ்வித தீர்மானங்களையும் வழங்கவில்லை எனவும் குறித்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை மின்சார சபையின் சில பொறியியலாளர்கள் நீண்ட கால நோக்கில் குறைந்த செலவில் மின்சாரத்தைத் தயாரிப்பதற்கான சில செயற்திட்டங்களை இனம் கண்டு அது தொடர்பாக அறிக்கை சமர்ப்பித்திருந்த நிலையில் அதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்காமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கடந்த 08ம் திகதி தொடக்கம் சட்டப்படி வேலை போராட்டத்தினை பொறியியலாளர்கள் ஆரம்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *