முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு அவரது விஜயராம இல்லத்தில் நடைபெற்றது.
வருடாந்தம் நடைபெறும் இந்த இப்தார் நிகழ்வில் இம்முறை அமைச்சர் ரவூப் ஹக்கீம், இராஜாங்க அமைச்சர்களான பௌஸி, ஹிஸ்புல்லாஹ், மற்றும் அதாவுல்லாஹ், பஷீர் சேகுதாவூத், ஹசன் அலி, நவ்சர் பௌசி, அமைச்சர் ரிசாட்டின் கட்சி பிரதிநிதிகள், மசூர் மௌலானா, கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்டு தெரிவான பல முஸ்லிம் உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய பிரதிநிதிகள், மாகனை சபை உறுப்பினர்கள் உவைஸ் ஹாஜி, சகாவுல்லாஹ் , முச்ன்னல் நகரசபை தலைவர்களை, உபதலைவர்கள், உறுப்பினர்கள் , வியாபாரிகள், ஊடகவியலாளர்கள் என அனைவரும் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும்.
அதேவேளை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சவூதி அரேபியா, துருக்கி, ஈரான், பலஸ்தீன் உள்ளிட்ட பல முஸ்லிம் நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்களும் இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
மஹிந்த ராஜபக்க்ஷ ஆட்சி கவிழ்ந்த பிறகு பலமுறை நடத்தப்பட்ட இப்தார் நிகழ்வுகளுக்கு அழைப்பிதழ் விடுத்தும் வராத முஸ்லிம் அரசியல்வாதிகள், வியாபாரிகள், ஊடகவியலாளர்கள் இம்முறை வந்து கலந்துகொண்டு சிறப்பித்ததை காணக்கிடைத்தது.
இதை அவதானித்த அரசியல் அவதானிகள், மஹிந்த ராஜபக்ஷவின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரிப்பதாலும், நல்லாட்சியிற்கு மக்கள் ஆதரவு நாளுக்கு நாள் குறைந்து வருவதாலும் மகிந்தவின் பக்கம் எதிர்காலத்தில் நகர்வதற்கு ஒரு பாலமாக இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்ததாக விவரிக்கின்றனர்.