• Fri. Nov 28th, 2025

இந்திய ஜனாதிபதி தாழ்த்தப்படட்டவராம், கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு

Byadmin

Jun 5, 2018

(இந்திய ஜனாதிபதி தாழ்த்தப்படட்டவராம், கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு)

ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் மாவட்டம், புஷ்கரிலுள்ள பிரம்மா கோவிலின் உள்ளே குடியரசுத் தலைவரை  நுழையவிடாத காரணத்தால் அவர் கோவி லுக்கு வெளியே உள்ள படியில் அமர்ந்து குடும் பத்துடன் வழிபாடு செய்தார்.
குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது குடும்பத்தி னருடன் ராஜஸ்தான் மாநி லத்தில் சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ளார். அப்போது அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள புஷ்கர் என்ற இடத்திலுள்ள பிரம்மா கோவிலுக்கு வழிபடச் சென்றார். அப்போது கோவில் பூசாரிகள் அவரை கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கவில்லை, ஆகையால் அவர் கோவிலுக்கு வெளியில் உள்ள படியில் அமர்ந்து வழிபாடு செய்தார். இந்த விவகாரம் சமூக வலை தளங்களில் பரவியது. இதை பல சமூக ஆர்வலர்கள் கண்டித்தனர்.
மேலும் இக்கோவிலில் பல ஆண்டுகளாக தாழ்த்தப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட வில்லை. இது தொடர்பாக பலமுறை சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர்அரசி டமும் கோவில் நிர்வாகத்தினரிடமும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2012- ஆம் ஆண்டு இக் கோவிலுக்கு அருகில் உள்ள மற்றொரு கோவிலில் பள்ளி செல்லும் தலித் மாண வர்கள் கோவிலுக்கு வழிபடச் சென்றதை தடுத்து அவர்களை விரட்டிய நிகழ்வு பெரும் விவாதத்திற்குள்ளானது.  இந்த நிலையில் குடியரசுத் தலைவருக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
கோவில் ஒன்றில் குடியரசுத்தலைவருக்கே வழி பட அனுமதியில்லை என்ற போது சாமானியர்களின் நிலை எப்படி இருக்கும் என்ற கோபத்தில் உத்தரப்பிரதேசத்தில் இருந்து அக்கோவிலுக்குச் சென்றார் ஒரு தலித். பக்தர்களைப் போல் அவரும் கோவில் வரிசையில் நின்றுகொண்டிருந்தார் அப்போது குடியரசுத்தலைவரை படியில் அமரவைத்து வழிபாடு செய்ய வைத்த கோவில் அர்ச்சகர் அங்கு வந்தார். அப்போது, தான் மறைத்து வைத்திருந்த இரும்புக் கம்பியால் அப் பார்ப்பனரை சராமரியாகத் தாக்கி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். கோவிலின் கண்காணிப்புக் காமிராவில் உள்ள பதிவை வைத்து கோவிலுக்கு வெளியே நடமாடிக் கொண்டிருந்த அசோக்கை கைது செய்தோம் என்று காவல் துறையினர் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *