நாட்டின் சட்டம் முஸ்லிம்களது விடையத்தில் என்ன செய்கின்றது என்பதில் பாராளுமன்றத்தில்அங்கம் வகிக்கும் எமக்கே சந்தேகம் எழுகின்றது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெர்வித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தானின் வவுனியா அலுவலகத்தில் இடம்பெற்ற இலவச கண் பரிசோதனை முகாமைத்தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அண்மைக்காலமாக நாட்டில் இடம்பெறும் வன்முறைகளை நாட்டுக்கே உரித்தான சட்டம் தமது கடமையை சரிவர செய்வதாக தெரியவில்லை இதனால் இந்த நல்லாட்சியின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை சிறுபாண்மையினர் இழந்து வருகின்றனர்.
கடந்த ஆட்சியை நாம் வீட்டுக்கு அனுப்பி சிறுபான்மையினரிடம் பிரச்சாரம் செய்து இந்த ஆட்சியை கொண்டுவந்தோம் எனினும் இந்த ஆட்சியிலும் அதே நிலை தொடர்வதால் மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் கேட்கும் கேள்விகளுக்கு எம்மால் பதில் கூற முடியாமல் இருக்கின்றது.
படையினரால் ஓரிருவரை கைது செய்தாலும் அவர்களை விடுத்து முதலில் இவ்வாறான நாசகார செயல்களை செய்யத்தூண்டுவோரையும் அதற்கு உதவிகளை வழங்குவோரையும் முதலில் கைது செய்ய வேண்டும்.
மேலும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களால் இனவாதிகளுக்கு எதிராக ஒன்றிணைத்து எடுக்கும் எந்த தீர்மானமாக இருந்தாலும் அதற்க்கு நானும் ஒத்துழைப்பேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
-ஊடகப்பிரிவு –