கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் அனுசரணையில் நாளை (15) ஆம் திகதி மாபெரும் இப்தார் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,
இந்த இப்தார் நிகழ்வில் ஶ்ரீலங்கா முஸ்லிம்க காங்கிரஸின் தேசியத் தலைவரும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார்,
ஏறாவூர் அலிகார் தேசியப் பாடசாலையில் இடம்பெறவுள்ள இந்த இப்தார் நிகழ்வில் பங்கேற்க மூவாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டினால் ரமழான் முழுவதும் ஓட்டமாவடி மற்றும் ஏறாவூர் பகுதிகளில் இப்தார் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே இந்த பாரிய இப்தார் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,
இதன் போது மார்க்க சொற்பொழிவுகள் மற்றும் தூஆப் பிரார்த்தனை ஆகியனவும் இதன் போது ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளன.