(தாமரைக் கோபுரத்தில் இருந்து இளைஞன் ஒருவன் விழுந்து பலி)
கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரைக் கோபுரத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த கிளிநொச்சி பிரதேசத்தினை சேர்ந்த இளைஞர் (19) ஒருவர் உயர் மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். தண்டு சுழற்றின் கயிறொன்று அறுந்ததிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக மேலும் கூறப்படுகின்றது.