• Mon. Oct 13th, 2025

கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் அதிக அளவில் கலந்து கொண்ட முஸ்லிம்கள்

Byadmin

Jun 9, 2018

(கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் அதிக அளவில் கலந்து கொண்ட முஸ்லிம்கள்)

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் தேசிய முஸ்லிம் ஒன்றிணைவு அமைப்பும், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அவர்களின் ஏற்பாட்டிலும் நேற்று (08.06.2018) கொழும்பு, Galle Face Hotel லில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் கலந்து கொண்டிருப்பதை அவதானிக்க முடிந்தது.

இந்நிகழ்வில் முஸ்லிம், தொழில் அதிபர்கள், சட்டத்தரணிகள். உலமாக்கள், ஊடகவியலாளர்கள், புத்திவீவிகள், அரசியல்வாதிகள் , முஸ்லிம் உயர்ஸ்தானிகர்கள், மத்திய மாகாணசபை உறுப்பினர் உவைஸ் ஹாஜி, மேல் மாகாணசபை உறுப்பினர் சகாவுல்லாஹ், முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் தேசிய அமைப்பாளர் அப்துல் சத்தார் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இங்கு உரையாற்றிய முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ, முஸ்லிம் மக்கள் எதிர்காலத்தில் அச்சமின்றி வாழ்வதற்கும், தமது மதக் கடமைகளில் ஈடுபடுவதற்கும், தமது வியாரங்களை நடத்துவதற்கும் மஹிந்த தலைமையிலான அரசாங்கம் பாரிய அர்பணிப்புடன் செயற்படும் என கோரினார்.

குறிப்பிட்ட நிகழ்வில், மிக அதிகமானவர்கள் கலந்து கொள்ள ஏற்பாட்டாளர்களை அணுகியும் Galle Face Hotel லில் குறிப்பிட்ட இடவசதியே இருப்பதால் மேலும் அதிகமானோர் இந்நிகழ்வில் கலந்து கொள்ள சந்தர்பம் வழங்கப்படவில்லை. இந்நிகழ்வில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள் தமது கவலையைத் தெரிவித்துள்ளனர்.

இதே நேரத்தில், நேற்று பியகம தேர்தல் தொகுதி , மல்வானையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இப்தார் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்வில், அதிகளவிலான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். முஸ்லிம்களுடன் மஹிந்த ராஜபக்ஷ சிநேக பூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், பேருவளை நகர சபை முன்னாள் தலைவர் மில்பர் கபூரின் ஏற்பாட்டில் கோத்தாபய ராஜபக்‌ஷ தலைமையில் அண்மையில் பேருவளையில் இடம்பெற்ற இப்தார் நிகழ்விலும் அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *