(வீதியில் குப்பை கொட்டிய தம்பதியினரை போட்டோ எடுத்து போஸ்டர் அடித்து ஒட்டிய பொதுமக்கள்)
இலங்கையில் பொது இடங்கள் மற்றும் அனுமதிக்கப்படாத இடங்களில் குப்பை கொட்டுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
சாமான்ய மக்களை விடவும் பெரும்பாலும் சட்டங்களை மீறுவதும், துஷ்பிரயோகம் செய்வது உயர்ந்த மட்டத்திலுள்ளவர்கள் என்பதற்கு இந்த காட்சிகள் சாட்சிகளாகும்.
இலங்கையில் இந்த சம்பவம் இடம்பெற்ற பிரதேசம் பற்றி விளக்கம் இல்லை. வீதியில் குப்பை கொட்டிய தம்பதியினர் அங்கிருந்து CCTV யில் பதிவாகி உள்ளனர்.
மற்றவர்களுக்கும் ஒரு எச்சரிக்கை கொடுக்கும் நோக்கில் அவர்கள் குப்பை கொட்டும் காட்சியை போஸ்டர் அடித்து அவ்விடத்திலேயே ஒட்டி உள்ளனர்.