• Sat. Apr 4th, 2026

அரச வங்கியில் 80 மில்லியன் ரூபா கொள்ளை, சீ.சீ.ரி.வி கமராவையும் எடுத்துச்சென்றனர்

Byadmin

Jul 2, 2018

(அரச வங்கியில் 80 மில்லியன் ரூபா கொள்ளை, சீ.சீ.ரி.வி கமராவையும் எடுத்துச்சென்றனர்)

அநுராதபுரம், தலாவ பிரதேசத்தில் அமைந்துள்ள அரச வங்கியொன்றில் 80 மில்லியன் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வார இறுதி நாட்களில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று காலை ஊழியர்கள் வங்கியை திறந்த சமயத்தில் கொள்ளைத் தொடர்பில் அறிந்து தமக்கு தகவல் அளித்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வங்கியில் பொருத்தப்பட்டிருந்த, சீ.சீ.ரி.வி கமரா மற்றும் உபகரணங்களும் கொள்ளையிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *