பேருந்து சேவைகளின் நேரங்களில் மாற்றம்
இன்று (25) நள்ளிரவு முதல் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் துறையின் நீண்ட தூர பேருந்து சேவைகளை ஒருங்கிணைந்த கூட்டு நேர அட்டவணையின் கீழ் இயக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.
2024 A/L பரீட்சைக்கான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் வெளியீடு
2024 -2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப்பரீட்சைக்கான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. இதனைத் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாட்டு மக்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் உரிமையாளர்களுக்கு, நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகள் போல் நடித்து மோசடியான தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்படுவதாக தெரியவந்துள்ளது. மோசடி தொலைபேசி அழைப்புக்களில், சட்ட நடவடிக்கையை தவிர்ப்பதற்காக, குறித்த வணிக நிறுவன உரிமையாளர்கள், மோசடியாளர்கள் வழங்கும்…
யாழில் கடைக்கு சென்றவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
யாழில் பொருட்களை வாங்குவதற்காக கடைக்கு சென்ற நபர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். முத்தமிழ் வீதி, கொட்டடி பகுதியைச் சேர்ந்த சின்னையா பிரேமந் (வயது 58) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நேற்று (21)…
தபால் ஊழியர்களுக்கு இம்மாத சம்பளம் வழங்கப்படாது – தபால் மா அதிபர்
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கு இம்மாத சம்பளம் வழங்கப்படாது எனத் தபால் மா அதிபர் ருவான் சத்குமார தெரிவித்துள்ளார். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தி, மாதாந்திர சம்பளம் பெற வேண்டுமானால் உடனடியாக கடமைக்குத் திரும்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக…
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று (22) காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையான நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு பயணிகள் இரவை கழிப்பதற்காக, புதிய முறையை அறிமுகப்படுத்திய உள்ளூர் மக்கள்
இலங்கைக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகள், சீகிரியாவில் இரவை கழிப்பதற்கான ஒரு புதிய முறையை உள்ளூர் மக்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். சீகிரியாவை பார்வையிடுவதற்கு மாலை 5 மணி வரை மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளதால், சீகிரியாவில் உள்ள வெளிநாட்டினர் யாரும் தங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.…
நீரில் மூழ்கி இளைஞன் மரணம்
திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இறக்கக் கண்டி கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி பலியானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் (21) இடம் பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் இறக்ககக் கண்டி வாழை ஊத்து பகுதியை…
அரச நிறுவனங்களில் தேவையற்ற பொருட்களை அகற்ற ஒரு வாரம்
அரச நிறுவனங்களில் குவிந்து கிடக்கும் தேவையற்ற பொருட்களை அகற்ற விசேட திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. “செயிரி வாரம்” என்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 04 ஆம் திகதி வரை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.…
1000 வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம்
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகத்தின் ஊடாக 1,338 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கு சுய போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் கடந்த 3 ஆம்…