நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்த்து வாக்களிப்பது, பிரதமரை குற்றமற்றவராக வெளிக்காட்டும் – நாமல்
(நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்த்து வாக்களிப்பது, பிரதமரை குற்றமற்றவராக வெளிக்காட்டும் – நாமல்) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின்போது,முஸ்லிம் அரசியல் வாதிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாகசெயல்படுவார்களாக இருந்தால்,அது, இன்று இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராகநடைபெற்றுக்கொண்டிருக்கும் அனைத்தையும் கட்டுப்படுத்தும் வகையிலானஅதிகரங்களை தன்னகத்தே கொண்டிருந்தும், கட்டுப்படுத்தாத பிரதமர் ரணிலைகுற்றமற்றவராக பொருள்படச் செய்யும் என ஹம்பாந்தோட்டை பாராளுமன்றஉறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார். பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் முஸ்லிம்எம்பி க்கள் வாக்களிப்பது தொடர்பில் அவரிடம். வினவியபோது அவர் மேலும்தெரிவிக்கையில்… இன்னும் ஒரு சில தினங்களில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரானநம்பிக்கையில்லா பிரேரணை பாரளுமன்றத்திற்கு கொண்டுவரப்படவுள்ளது. இதன்போது, இலங்கை மக்கள் சில ஆச்சரியத்தக்க வகையிலான முடிவுகளை கண்டு கொள்ளமுடியும் என நம்புகிறேன். பல கட்சிகளையும் சேர்ந்த அரசியல் வாதிகள் தாமாகவே முன்வந்து, எமது பிரேரணைக்கு ஆதரவு தரவுள்ளதாக உறுதி அளித்துள்ளனர். இருந்தாலும்,இலங்கை முஸ்லிம் அரசியல் வாதிகள் எவ்வாறு செயற்பட போகிறார்கள் என்பதுஅனைவரதும் எதிர்பார்ப்பாகவே உள்ளது. இலங்கையில் என்றுமில்லாதவாறு முஸ்லிம்களுக்கு எதிரான வன் முறைகள்அதிகரித்துள்ளன. இலங்கை அரசு, இந்த வன் முறைகளை கட்டுப்படுத்த போதியளவுநடவைக்கை எடுக்கவில்லை. கண்டி, அம்பாறை சம்பவங்கள் நடைபெறும் போது, ரணில்பிரதமர் எனும் பாரிய அதிகாரத்துக்கு மேலதிகமாக சட்ட ஒழுங்கு அமைச்சையும்வைத்திருந்தார். இது போன்ற கலவரங்களை கட்டுப்படுத்த இன்னுமென்ன அதிகாரங்கள்வேண்டும். வேறு யாராவது சட்ட ஒழுங்கு அமைச்சை வைத்திருந்தால், தான்நினைத்ததை செய்ய முடியாதென, அவர், அதனை தன் கையில் வைத்திருந்தாரோதெரியவில்லை. அப்படியும் சிந்திக்கக் கூடியவர் தான். இறுதியில் இக் கலவரங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததன் பின்னணியில்சர்வதேச அழுத்தங்கள் இருந்தன. இன்னும் ஒரு சில தினங்களில் பிரதமருக்கு எதிரானநம்பிக்கையில்லா பிரேரணை வரவுள்ளது. இதனை சர்வதேசமும் எதிர்பார்த்த வண்ணம்உள்ளது. இதன் போதான ஒவ்வொரு விடயங்களும் அணு, அணுவாக ஆராயப்படும்.இலங்கை முஸ்லிம் அரசியல் வாதிகள், அமைச்சு போன்ற சுக போகங்களை முன்நிறுத்தி, பிரதமருக்கு ஆதரவாக செயற்படுவார்களாக இருந்தால், தற்போதுமுஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றுக்கொண்டிருக்கும் இனவாத செயற்பாடுகளில்,பிரதமர் ரணில் எந்த வித குற்றமும் அற்றவர் என்ற சான்றிதழை, முஸ்லிம் அரசியல்வாதிகளை வழங்கியதாக அமைந்து விடும். ஒரு சில முஸ்லிம் அரசியல் வாதிகள், பாராளுமன்றத்தில் வீராப்புடன், சமூக தியாகிகள்போன்று குரல் கொடுத்துவிட்டு, ஜனாதிபதியுடன் பாகிஸ்தான் சென்று, ஜனாதிபதியைகுற்றமற்றவராக காட்டி இருந்தனர். இது போன்ற செயற்பாடுகள் இன்னுமின்னும்தொடர்ந்தால், இவ்வரசினர் முஸ்லிம்களை இன்னுமின்னும் அடக்கி, ஒடுக்கி ஆள்வார்கள்என்பதில் ஐயமில்லை என அவர் குறிப்பிட்டார்.
வரலாற்றில் இன்று….
(வரலாற்றில் இன்று….) மார்ச் – 29 நிகழ்வுகள் 1632 – கியூபெக் ஆங்கிலேயரிடம் இருந்து பிரெஞ்சுக்களிடம் கைமாறியது. 1792 – 13 நாட்களின் முன்னால் சுடப்பட்ட சுவீடனின் மூன்றாம் குஸ்தாவ் மன்னன் இறந்தான். 1807 – 4 வெஸ்டா என்ற இதுவரை…
நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்க ஐ.தே.க தீர்மானம்
(நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்க ஐ.தே.க தீர்மானம்) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘அரசாங்கத்தின் பெரும்பான்மை நீக்கப்பட வேண்டும்’ – விமல் வீரவன்ச
அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் காணப்படும் பெரும்பான்மையை ஒழிக்க வேண்டுமென, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். இன்றைய தினம் (29) கடுவல நகரசபை நகராதிபதி தனது கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, இதனைத் தெரிவித்தார்.
கோடையில் வியர்க்குரு தொல்லையை விரட்டியடிக்கும் அற்புதமான பானம்..!
(கோடையில் வியர்க்குரு தொல்லையை விரட்டியடிக்கும் அற்புதமான பானம்..!) வியர்க்குரு பிரச்னையை விரட்ட மற்றும் அவற்றின் தீவிரத்தைக் குறைக்க பனை நுங்கைப் பயன்படுத்தவும். கோடை வெயில் அதிமாகிவிட்ட நிலையில் வெப்பத்தின் காரணமாக சிலருக்கு வியர்க்குரு தொல்லை அதிகம் இருக்கும். கோடையில் நமக்கு இயற்கை…
கோடையில் மட்டும் அல்ல ஆயுட்காலம் வரை மனிதனுக்கு உகந்தது பப்பாளி…!
(கோடையில் மட்டும் அல்ல ஆயுட்காலம் வரை மனிதனுக்கு உகந்தது பப்பாளி…!) பழுத்த பப்பாளியின் தசை பகுதியை எடுத்து பிசைந்து, முகத்தில் பூசி அரை மணி நேரம் வைத்திருந்து முகத்தை கழுவுங்கள். சரும சுருக்கம், படை போன்றவை நீங்கி, முகம் ஜொலிக்கும். பப்பாளி…
வடகொரியா அதிபரை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் – டிரம்ப்
(வடகொரியா அதிபரை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் – டிரம்ப்) வடகொரியாவும், தென்கொரியாவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. தென்கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக செயல்பட்டு வருகிறது. இதனால் கோபம் அடைந்த வடகொரியா, அமெரிக்காவுடன் மோதல் போக்கில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்கா மீது ஏவுகணை தாக்குதல்…
க.பொ.த (சா/த) பரீட்சை – தேசிய ரீதியில் 06 முதலிடங்கள்
(க.பொ.த (சா/த) பரீட்சை – தேசிய ரீதியில் 06 முதலிடங்கள்) 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த (சா/த) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்று அகில இலங்கை ரீதியாக முதலாவது இடத்தை ஆறு மாணவர்கள் பெற்றுக்கொண்டுள்ளனர். கசுனி செனவிரத்ன : கம்பஹா…
விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம்
(விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம்) ஒவ்வொரு நாள் முடிவிலும் அன்றைய தினத்தின் நம்முடைய நடவடிக்கைகள் பற்றிச் சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் செய்த நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? சீர்திருத்தப்பட வேண்டியது என்ன? அதிகப்படுத்த வேண்டியது, தவிர்ந்து கொள்ள வேண்டியது…
இலங்கை முஸ்லிம்களின் வரலாறு பற்றிய புத்தகங்கள்
(இலங்கை முஸ்லிம்களின் வரலாறு பற்றிய புத்தகங்கள்) பெரும்பாலானவர்கள் எமது வரலாறு பற்றி எந்த பிரக்ஞையுமற்று இருக்கின்றனர். அதனால் இனவாதிகளால் திரிபுபடுத்தப்பட்ட எமது வரலாற்றை நாம் சிலவேளை நம்புகிறோம். எமது வரலாற்றை சரியான முறையில் தெரிந்து வைத்திருப்பது அவசியம்..அந்த வகையில் சாதாரண பொதுமகனிற்கு…