(கோடையில் வியர்க்குரு தொல்லையை விரட்டியடிக்கும் அற்புதமான பானம்..!)
வியர்க்குரு பிரச்னையை விரட்ட மற்றும் அவற்றின் தீவிரத்தைக் குறைக்க பனை நுங்கைப் பயன்படுத்தவும்.
கோடை வெயில் அதிமாகிவிட்ட நிலையில் வெப்பத்தின் காரணமாக சிலருக்கு வியர்க்குரு தொல்லை அதிகம் இருக்கும்.
கோடையில் நமக்கு இயற்கை அளித்திருக்கும் அற்புதம் பனை நுங்கு. இதை வியர்க்குரு உள்ள இடங்களில் தேய்த்தால் அதன் தீவிரம் குறையும்.
நுங்கு கிடைக்கவில்லை என்றால், சந்தனம், சோற்றுக்கற்றாழைச் சாற்றினை உடலில் பூசிக்கொள்ளலாம். சோற்றுக்கற்றாழை, கோடையின் வரப்பிரசாதம். வாரத்துக்கு மூன்று நாள்கள்
சோற்றுக் கற்றாழைச் சாறு அருந்தினால் வியர்க்குரு பிரச்னை சரியாகும்.
சோற்றுக்கற்றாழைச் சாறு தயாரிப்பது எப்படி?
சோற்றுக்கற்றாழை – 30 – 45 மி.லி
எலுமிச்சைப்பழச் சாறு – 2 டீஸ்பூன்
இஞ்சிச் சாறு – 1 டீஸ்பூன்
நாட்டுச்சர்க்கரை – தேவைக்கேற்ப.
மேலே சொன்னவற்றை ஒரு டம்ளர் மண்பானைத் தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும்.