மின்சார கட்டணத்தை செலுத்த 3 மாத கால அவகாசம் – தவறினால் துண்டிக்கப்படும்
மின்சார கட்டணத்தை செலுத்த 3 மாத கால அவகாசத்தை வழங்குவதற்கான கட்டளை இன்று (17) பிறப்பிக்கப்படும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கமைய தாமத கொடுப்பனவை 3 மாதங்களுக்குள் செலுத்த தவறும் மின் பாவனையாளர்களுக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்படும்…
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்
எதிர்வரும் பாராளுமன்ற அமர்வை பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சபைத் தலைவர் அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.
எரிபொருள் விலையை உடனடியாக அதிகரிக்கவும் ; அரசாங்கத்திடம் மத்திய வங்கி ஆளுநர் வேண்டுகோள்.
எரிபொருள் விலையை அதிகரிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வங்கி ஆளுநர் அரசாங்கத்திடம் கோரியுள்ளாா்.பெற்றோலிய கூட்டுத்தாபனம் தொடர்ந்து நட்டமடைந்து வருவதால் தொடர்ந்து கூட்டுத்தாபனத்தை முன்னெடுத்து செல்ல முடியாமல் போகுமென மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளாா்.எரிபொருள் விலையை அதிகரிக்காவிட்டால்…
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளருக்கு கொரோனா தொற்று.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் அநுர திஸாநாயக்கவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமரின் செயலாளர் காரியாலயத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளாா்.கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டதால் அவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் அதன்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளாா்.
குளிர் காலத்தில் ஏ.சி. பயன்படுத்தலாமா?
குளிர்காலத்தில் ஏ.சி. இயந்திரங்களைப் பயன்படுத்துவதால் நமது ஆரோக்கியம் பாதிக்கப்படுமா? ஏ.சி. இயந்திரத்தில் ஏதேனும் கோளாறுகள் ஏற்படுமா? என்று தெரிந்துகொள்ளலாம். வெயில் காலத்தில் சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பத்தில் இருந்து காத்துக்கொள்வதற்கு, ஏ.சி. இயந்திரங்களை வீட்டில் பயன்படுத்துகிறோம். கோடை காலம் முழுவதும் குளிர்ச்சியான அறையில்…
சைபர் தாக்குதல்: உக்ரைன் அரசு இணையதளத்தில் ஹேக்கர்கள் ஊடுருவல்
உக்ரைன் – ரஷ்யா இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் உக்ரைன் நாட்டு அரசு மற்றும் வங்கி இணையதளங்களில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. உக்ரைனின் தகவல் பாதுகாப்பு மையம் கூறும்போது, ‘உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இரண்டு வங்கிகளின்…
ரஷிய அருங்காட்சியகத்தில் ஹிட்லருக்கு காந்தி எழுதிய கடிதம் காட்சிக்கு வைக்கப்படுகிறது
ரஷியாவில் உள்ள டிரெட்டியாகோவ் அருங்காட்சியகத்தில் இந்திய கலைக்கண்காட்சியில் காந்தி ஹிட்லருக்கு எழுதிய கடிதத்தை காட்சிக்கு வைக்க இருப்பதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. ஜெர்மனியில் 1933 முதல் 1945-ம் ஆண்டு வரை ஆட்சி செய்த சர்வாதிகாரி ஹிட்லர் யூதர்கள் ஒழிப்புத் திட்டம் என்ற பெயரில்…
ஜனாதிபதி தலைமையில் கங்காராம நவம் மஹா பெரஹரா…
கொழும்பு – ஹுணுபிட்டிய கங்காராம விஹாரையின் 43 ஆவது நவம் மஹா பெரஹரா உற்சவம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (16) இரவு இடம்பெற்றது.
தேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு. நம் அனைவருக்கும் உள்ளது – பிரதமர் மஹிந்த
கொவிட் தொற்றுநோயின் அழிவுகரமான விளைவுகளிலிருந்து நாடு மீண்டு வரும் நிலையில் தேசத்தை மீளக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருப்பதாக தாம் நம்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தாhர். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (15)…
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இடம்பெயரும் ‘கிரிம்சன் ரோஸ்’
இந்தியாவின் – இராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி பகுதிகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான ‘கிரிம்சன் ரோஸ்’ (Crimson Rose) வண்ணத்துப்பூச்சிகள் இலங்கைக்கு இடம்பெயர்ந்து வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. குறித்த வகையான வண்ணத்துப்பூச்சிகள் காலநிலை மாற்றம் மற்றும் உணவு தேவைக்காக வடகிழக்குப் பருவ பெயர்ச்சி மழைக்கு…