ரஷ்ய – உக்ரைன் இடையில் சமாதான பேச்சுவரத்தை ஆரம்பமானது.
உக்ரைன் மீது ரஷ்யா முன்னெடுத்துவரும் தாக்குதல்களை நிறுத்துவது தொடர்பில் பெலாரஸில் ரஷ்ய – உக்ரைன் பிரதிநிதிகளுக்கிடையில் பேச்சு ஆரம்பமாகியுள்ளது.இந்த பேச்சுவரத்தை பெலாரஸ் நாட்டின் எல்லையில் உள்ள கோமல் நகரில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.போரைத்தொடங்கி வீறுகொண்டு நடத்தினாலும், சமரச பேச்சு நடத்த ரஷ்யா…
ஒன்றுகூடல்கள் அதிகரிப்பு – ஆபத்து என்கிறது PHI
நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் நடைபெறும் இசைக் கச்சேரிகள் உள்ளிட்ட சமூக ஒன்றுகூடல்களால் எதிர்காலத்தில் கொவிட் 19 வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனூடாக தடுப்பூசிக்கு பதிலளிக்காத கொவிட் வகையை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக…
நாங்கள் எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடல்ல, முடியுமானளவு சிக்கனப்படுத்திக்கொள்ள வேண்டும் – தினேஷ்
நாங்கள் எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடு அல்ல அதனால் முடியுமானளவு நாங்கள் எரிபொருளை சிக்கனப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். நுகேகொடை மிரிஹான பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது…
பேக்கரி தொழிலை முன்னெடுத்துச் செல்வது சவாலாக மாறியுள்ளது
பேக்கரி உற்பத்திக்கு தேவையான கோதுமை மா, மாஜரின், வெண்ணெய் மற்றும் பாம் ஒயில் போன்ற மூலப்பொருட்களின் தட்டுப்பாட்டினால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. டொலர் தட்டுப்பாடே மூலப்பொருட்களை இறக்குமதி செய்யாதமைக்கு காரணம் என அகில…
மக்களின் சுதந்திரம், எதிர்பார்ப்புகளை உறுதி செய்யும் ஜனநாயக முறைமையிலிருந்து விலகப்போவதில்லை – ஜனாதிபதி
நாட்டை ஆட்சி செய்யும் போது, பொதுமக்களின் சுதந்திரம் மற்றும் எதிர்பார்ப்புகளை உறுதி செய்யும் ஜனநாயக முறைமையிலிருந்து விலகப்போவதில்லை என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். இருப்பினும், அதனால் கிடைக்கும் சுதந்திரத்தைத் தவாறாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டாமென்று, அனைத்துத் தரப்பினரிடமும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். ஒரு…
மார்ச் 1 முதல் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு புறப்படுவோருக்கான அறிவித்தல்
இலங்கையில் இருந்து ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் மார்ச் 1 ஆம் திகதி முதல் புறப்படுவதற்கு முன்னர் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்பட வேண்டிய அவசியமில்லை என சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை (CAA) தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு…
5 முதல் 12 வயதுக்கிடைப்பட்ட சிறுவர்களுக்கு முதற்கட்ட தடுப்பூசி செலுத்துவது குறித்து அவதானம்
நாட்டில் 12 – 15 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசியை வழங்குவது தொடர்பிலும் , 5 – 12 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கு முதற்கட்ட தடுப்பூசியை வழங்குவது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு – சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின்…
7 நாட்களுக்கு தேவையான டீசலே கையிருப்பிலுள்ளது – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கையிருப்பில் எதிர்வரும் 7 நாட்களுக்கு தேவையான டீசல் தொகை கையிருப்பில் உள்ளதால் எதிர்வரும் நாட்களில் டீசலை இயலுமான அளவு சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. எரிபொருள் விநியோகத்தில் நெருக்கடி நிலைமை…
நாட்டில் இணையவழியூடான குற்றச் செயல்கள் அதிகரிப்பு – அஜித் ரோஹண
நாட்டில் இணையவழியூடான குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன சமூக வலைத்தளங்கள் ஊடாக இடம்பெறுகின்ற மோசடிகளால் 30 – 40 வயதுக்கு இடைப்பட்ட பெண்களே அதிகளவில் பாதிக்கப்படுவதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இவ்வாறு இணையவழி குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பில்…
வெற்றிகரமான தடுப்பூசி ஏற்றல் கொவிட் பேரழிவை தடுத்தது – ஜனாதிபதி
இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட வெற்றிகரமான தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டத்தினால் தொற்றுப் பரவல் காரணமாக நாட்டுக்கு ஏற்படவிருந்த பாரிய அழிவு நிலைமையைக் கட்டுப்படுத்த முடிந்தது. தடுப்பூசி பெற்றுக்கொள்ளக்கூடிய மொத்த சனத்தொகையில் 95 சதவீதமானோர் முதற்கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளதோடு, 80 சதவீதமானோர் முழுமையான தடுப்பூசியைப்…