ஓமான் அரசினால் இலங்கைக்கு கடனுதவியாக, வழங்கிய 3,500 மெற்றிக்தொன் எரிவாயு இறக்கப்பட்டது
ஓமான் அரசாங்கத்தால் இலங்கைக்கு கடனுதவியாக வழங்கப்பட்ட 3,500 மெற்றிக் தொன் எரிவாயு, இன்று (27) பிற்பகல் கப்பலிலிருந்து தரையிறக்கப்பட்டதாக லிட்ரோ காஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார். லிட்ரோ நிறுவனத்திடம் போதியளவு எரிவாயு கையிருப்பு இருப்பதால், நாளொன்றுக்கு 100,000 சிலிண்டர்கள் வீதம்…
சடலத்தை புதைக்கும் போதே மின்னல் தாக்கியது, மாவனெல்லயில் 25 பேர் காயம்
மாவனெல்ல பகுதியில் மின்னல் தாக்கியதில் சிறுவர்கள் உள்ளிட்ட 25 பேர் காயமடைந்துள்ளனர். மாவனெல்ல − பெமினிவந்த பகுதியிலுள்ள மயானமொன்றில் பெண்ணின் சடலத்தை புதைக்கும் போதே மின்னல் தாக்கியுள்ளது இவ்வாறு காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்
அமைச்சர்கள் பறப்பதற்கு ஹெலிகொப்டர் அல்லது விமானங்களை வழங்குவது நிறுத்தப்பட்டது
பாதுகாப்பு அமைச்சின் விசேட அனுமதியின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு ஹெலிகொப்டர்கள் அல்லது விமானங்களை வழங்குவதை நிறுத்தியுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. எரிபொருள் பிரச்சினை உள்ளிட்ட பல காரணிகளை அடிப்படையாக கொண்டு இந்த தீர்மானம்…
சிறுவர், பெண் துஸ்பிரயோக குற்றச் செயல்களை தடுக்க முன்வாருங்கள் – பொறுப்பதிகாரி றம்சீன் பக்கீர்
– பாறுக் ஷிஹான் – சிறுவர் மற்றும் இளம் பெண்களை துஸ்பிரயோக குற்றச் செயல்களை எமது பிராந்தியத்தில் மேற்கொள்வதற்கு ஒரு போதும் இடமளிக்க முடியாது என கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.றம்சீன் பக்கீர் தெரிவித்தார். கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…
“குளிர்சாதனப் பெட்டி உணவுகளை வாங்கும் போது அதிக கவனம் செலுத்துங்கள்”
மின்வெட்டு காரணமாக விற்பனை நிலையங்களில் குளிர்சாதனப் பெட்டிகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் காலாவதியாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் இவ்வாறான உணவுகளை…
இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை 30 முதல் 40 சதவீதத்தால் அதிகரித்தது.
இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை 30 முதல் 40 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாகவே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.சீனி, பருப்பு, அரிசி ஆகியவற்றின் விலைகளே இவ்வாறு அதிகரித்துள்ளதாக…
நிதிச் சேவையை வழங்குவதற்கான VAT அதிகரிப்பு
நிதிச் சேவையை வழங்குவதற்கான சேர் பெறுமதி வரியை அதிகரிப்பதற்கான உரிய சட்டமூலம் திருத்தங்களுடன் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கமைய 2022 ஜனவரி 01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நிதிச் சேவை வழங்கலுக்கு சேர் பெறுமதி வரி 15% இலிருந்து…
இன்றும் 6 மணித்தியாலங்களுக்கு அதிக மின்வெட்டு
இன்றைய தினமும் (23) நாட்டில் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு தேசிய பொதுப் பயன்பாடுகள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, P, Q, R, S, T, U, V, W வலயங்களுக்கு காலை 8.30 மணி…
உலக வங்கியிடமிருந்து ஒரு பில்லியன் டொலர் கடனை எதிர்பார்க்கும் இலங்கை
உலக வங்கியிடம் இருந்து ஒரு பில்லியன் டொலர் கடன் உதவியை இலங்கை பெற்றுக்கொள்ளும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய இலங்கையின் கிராமப்புற அபிவிருத்தி, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு உலக வங்கியிடம் இந்த கடன் உதவியை இலங்கை நாடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.…
‘பிளேன் ரீ’ யின் விலை ரூ.60 ஆனது
சீனி மற்றும் எரிவாயு விலை உயர்வால் இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அண்மையில் 30ரூபாவுக்கு தேநீர் விற்பனையானமை குறிப்பிடத்தக்கது. உணவுப் பொருட்களின் விலை உயர்வால் உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக உணவக உரிமையாளர்கள்…