– பாறுக் ஷிஹான் –
சிறுவர் மற்றும் இளம் பெண்களை துஸ்பிரயோக குற்றச் செயல்களை எமது பிராந்தியத்தில் மேற்கொள்வதற்கு ஒரு போதும் இடமளிக்க முடியாது என கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.றம்சீன் பக்கீர் தெரிவித்தார்.
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நற்பிட்டிமுனை மற்றும் கல்முனைகுடி கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பு குழுக்கள் உருவாக்குவதற்கான கலந்துரையாடல் நற்பிட்டிமுனை அல் அக்ஸா ஆரம்ப பாடசாலை மற்றும் கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலய மண்டபத்தில் சமூக பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.எம் வாஹீட் ஒருங்கிணைப்பில் மாலை இடம்பெற்ற போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.