இலங்கை இராணுவம் வௌியிட்டுள்ள அறிக்கை
சில தரப்பினரின் தவறான வழிநடத்தல் மற்றும் தவரான விளக்கங்களினால், படையினர் தொடர்பாக மேற்கொள்ளப்படும் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் முயற்சிகளை பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து நாடு முழுவதும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் இராணுவத்தை களங்கப்படுத்தும் முயற்சிகள், இராணுவத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக…
இலங்கைக்கு மனிதாபிமான உதவியாக 100,000 அமெரிக்க டொலர்களை வழங்குவதாக சிங்கப்பூர் அறிவித்தது.
சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் (SRC) ஊடாக இலங்கையின் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கான பொது நிதி திரட்டும் முயற்சிகளுக்கு ஆதரவாக 100,000 அமெரிக்க டாலர்களை சிங்கப்பூர் அரசாங்கம் வழங்க உள்ளது. வெள்ளியன்று (ஏப்ரல் 15) ஒரு அறிக்கையில், சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் (MFA) இந்த நடவடிக்கை…
நாளை புதிய அமைச்சரவை உட்பட பல தீர்மானங்கள் ஜனாதிபதி தலைமையிலான கலந்துரையாடலில் எடுக்கப்பட்டன.
ஜனாதிபதி தலைமையில் கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற முன்னாள் அமைச்சர்களுடனான சந்திப்பு சற்று முன்னர் நிறைவடைந்தது. இந்த கூட்டத்தின்படி ,* நாளை மாலையளவில் புதிய அமைச்சரவை பதவியேற்பு* நாமல் , பெசில் , சமல் , சஷீந்திர அமைச்சுப் பதவிகளை ஏற்காதிருக்க முடிவு*…
கடவத்தையில் 27 மில்லியன் ரூபா பணம் திருட்டு – ஒருவர் கைது
கடவத்தையில் உள்ள துணிக்கடை ஒன்றில் பெட்டகத்தை உடைத்து 27 மில்லியன் ரூபா பணத்தை திருடிய சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 14 ம் திகதி இரவு கடையின் பெட்டகத்தை உடைத்து பணம் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த…
கொழும்பு பங்குச் சந்தைக்கு தற்காலிகமாக பூட்டு
கொழும்பு பங்குச் சந்தை தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தலில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை (18) முதல் 5 நாட்களுக்கு கொழும்பு பங்குச் சந்தை மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணை பயிற்றுவிப்பாளராக நவீத் நவாஸ் நியமனம்
இலங்கை கிரிக்கெட் அணியின் துணை பயிற்றுவிப்பாளராக நவீத் நவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இதற்கு முன்னர் பங்களாதேஷ் 19 வயதிற்கு உட்பட்ட அணியின் பயிற்றுவிப்பாளராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு
இன்று (16) மற்றும் நாளை (17) இரண்டு மணித்தியாலங்கள் 15 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இரண்டு நாட்களிலும் மாலை 6 மணிக்கு மேல் மின்வெட்டு இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசில் ராஜபக்ஷவுக்கு கொரோனா – வைத்தியசாலையில் அனுமதி
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து பசில் ராஜபக்ஷ கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இரு கப்பல்கள் இலங்கைக்கு
எரிபொருளை ஏற்றிய மேலும் இரண்டு கப்பல்கள் இன்று இலங்கை வந்தடையவுள்ளன. 40, 000 மெட்ரிக் தொன் டீசலும் 37,000 மெட்ரிக் தொன் பெட்ரோலும் இவற்றில் இருப்பதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்தது. எரிபொருள் விநியோக நடவடிக்கை இன்றும் இடம்பெறுவதாக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. விவசாய…
எரிபொருள் பவுசர் உரிமையாளர்களுக்கு விசேட அறிவித்தல்
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து எரிபொருள் பவுசர் உரிமையாளர்களுக்கும் விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு இருப்பதால், எரிபொருள் விநியோக செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக, குறிப்பிட்ட முனையங்கள் மற்றும் டிப்போக்களுக்கு தங்கள் பவுசர்களை உடனடியாக அனுப்புமாறு…