• Sun. Oct 12th, 2025

மேலும் இரு கப்பல்கள் இலங்கைக்கு

Byadmin

Apr 15, 2022

எரிபொருளை ஏற்றிய மேலும் இரண்டு கப்பல்கள் இன்று இலங்கை வந்தடையவுள்ளன.

40, 000 மெட்ரிக் தொன் டீசலும் 37,000 மெட்ரிக் தொன் பெட்ரோலும் இவற்றில் இருப்பதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்தது.

எரிபொருள் விநியோக நடவடிக்கை இன்றும் இடம்பெறுவதாக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. விவசாய நடவடிக்கைகளுக்காக உரிய அதிகாரிகளின் பரிந்துரைகளின் கீழ் டீசல் வழங்கப்படுகிறது.

போத்தல்கள் மற்றும் கலன்களில் எரிபொருளை வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது. கலன்களில் எரிபொருளைக் கொள்வனவு செய்து அவற்றை வெளியிடங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றமை தொடர்பான தகவல் கிடைத்ததை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு தடை இன்றி எரிபொருளை வழங்கும் நோக்கோடு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் எரிபொருளை சேமித்து வைப்பவர்களுக்கும், விற்பனை செய்வோருக்கும் எதிராக பொலிசார் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

இதேவேளை, இலங்கைக்கு விரைவில் 8 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் காஸ் கிடைக்க இருப்பதாக லிற்றோ காஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. உலக வங்கியின் உதவியோடு காஸை இறக்குமதி செய்வதற்கென 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படவிருக்கின்றன.

இதற்கமைய இலங்கையில் காஸ் விநியோக நடவடிக்கை எதிர்வரும் 18ம் திகதி மீண்டும் ஆரம்பமாகும் என்று லிற்றோ நிறுவனம் அறிவித்துள்ளது இந்த மாதத்தில் இதுவரை 8 இலட்சம் வீட்டுப் பாவனைக்கான காஸ் சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. தொழிற்சாலைகள், வைத்தியசாலைகள், ஹோட்டல்கள் அடங்கலாக இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ள காஸின் அளவு 11 மெட்ரிக் தொன்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *